டெல்லி: புதிய வரி நடைமுறையை தேர்வு செய்தவர்களுக்கு வருமான வரி அடுக்கில் சில மாற்றங்களை மத்திய பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் மாத சம்பள பெறக்கூடிய தனிநபர் 17,500 வரை வருமான வரியை மிச்சப்படுத்த முடியும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. அது எப்படி என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மத்திய பட்ஜெட்டில் புதிய வரி நடைமுறையில் இரண்டு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நிலையான கழிவு என்பது புதிய வருமான வரி நடைமுறையில் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல வருமான வரி அடுக்கிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி ,

ரூ.3 லட்சம் வரை வருமானம் - வரி இல்லை
ரூ. 3 லட்சம் முதல் 7 லட்சம் வரை - 5%
ரூ. 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை - 10%
ரூ.10 லட்சம் முதல் 12 லட்சம் வரை - 15%
ரூ. 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை- 20%
ரூ.15 லட்சத்திற்கு மேல் - 30% என வருமான வரி அடுக்கில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த புதிய மாற்றம் மற்றும் நிலையான வரிக்கழிவு உயர்வு ஆகியவை காரணமாக ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் எப்படி 17,500 ரூபாய் வரியை மிச்சப்படுத்த முடியும் என பார்க்கலாம்.
15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர்கள் 30% வரி விகித பிரிவில் வருகிறார்.
முதலில் 3-6 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 15,000 ரூபாய் வரி செலுத்த வேண்டி இருக்கும், அதுவே புதிய மாற்றத்தின் படி அது 20,000 ரூபாய் என மாறியுள்ளது. அதாவது 5,000 ரூபாய் கூடுதலாகியுள்ளது.

இரண்டாவதாக 9-12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 15% வரி செலுத்த வேண்டி இருந்தது. அதாவது கடந்த ஆண்டு முறைப்படி 45,000 ரூபாய் வரி செலுத்த வேண்டும், ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தின் படி 10 முதல் 12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்கள் 15% வரி செலுத்த வேண்டும். எனவே வரி தொகை 30,000 என குறைந்துள்ளது. எனவே இந்த அடுக்கில் சேமிப்பு 15,000 ரூபாய். இந்த இரண்டாவதையும் கணக்கிட்டு பார்த்தால் மொத்த சேமிப்பு 10,000 ரூபாய் ஆகும்.
தற்போது நிலையான வரிக்கழிவு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. 25,000 ரூபாய் கூடுதலாக வரிக்கழிவு கிடைக்கும். தற்போது 30 சதவிகித வரி வரம்பில் வருபவர்களுக்கு இந்த 25,000இல் 30% எனில் 7,500. அதாவது மொத்தமாக வரியில் 10,000 ரூபாய் மற்றும் நிலையான வரிக்கழிவு மூலம் கூடுதலாக 7,500 ரூபாய் என மொத்தம் 17,500 ரூபாய் வரி சேமிக்க முடியும்.
இப்படி தான் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு நபர் புதிய மாற்றங்கள் மூலம் 17,500 ரூபாய் வரியை மிச்சப்படுத்த முடியும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications