தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே முக்கியமான ஒரு திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை: குடும்பத்திற்காக உழைக்கும் மகளிருக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தின் வருமானத்தின் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்கிலேயே மாதந்தோறும் 1000 ரூபாயை அரசு வரவு வைக்கிறது. இந்த திட்டம் தமிழ்நாடு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாதம் ரூ.1,000: தமிழ்நாட்டை சேர்ந்த ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை உரிமை தொகையாக பெற்று வருகின்றனர் . தகுதி இருந்தும் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய முடியவில்லை என தவித்த பெண்களுக்கு ஒரு வாய்ப்பாக தான் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் அமைந்துளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் தனக்கு தகுதி இருக்கிறது என எண்ணும் பெண்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே நடக்கக்கூடிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் சென்று மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மட்டுமே கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு அறிவித்துள்ளது. பெண்கள் தங்களுடைய ரேஷன் அட்டை ,ஆதார் அட்டை ,வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வீட்டின் மின்கட்டண ரசீது ஆகிய நான்கு ஆவணங்களையும் கொண்டு சென்று உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.

எப்படி நிலையை அறிவது: முகாமிலேயே பெண்கள் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்ணப்பங்களின் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் தங்களுடைய விண்ணப்பம் வழங்கப்பட்டு அதன் நிலையை அறிய வேண்டும் என விரும்பும் பெண்கள் எளிதாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப நிலையை கண்டறிய: https://kmut.tn.gov.in/index.html இந்த இணையதள பக்கத்திற்கு சென்றால் முகப்பு பக்கத்திலேயே உங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிய என்ற டேப் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய ஆதார் எண் கேட்கும், ஆதார் எண்ணை உள்ளிட்டவுடன் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.
ஓடிபியை உள்ளிட்டு நிலையை அறிக என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா அல்லது பரிசீலனையில் உள்ளதா என்ற விவரம் அதில் காண்பிக்கும் . எனவே மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்த பெண்கள் இந்த இணையதள பக்கத்திற்கு சென்று தங்களின் விண்ணப்பத்தின் நிலையை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications