இன்று தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் எளிய மற்றும் வேகமாக வீட்டுக் கடன் வசதிகள் கொடுப்பது மூலம் சொந்த வீடு வாங்குவது என்பது எளிதாக எட்டக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் அடுத்த 20 முதல் 30 வருடம் ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என்பது பெரும் சுமை.
இந்த வீட்டுக் கடன் சுமையை எப்படி / எப்போது குறைக்கலாம் என்பது குறித்து பொருளாதார வல்லுநரும், ஸ்கைமேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான கே ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் முக்கியமான பதிவை பதிவிட்டு உள்ளார்.

வீட்டுக்கடன் வாங்கும் முன் ஒரு நீண்ட கால நிதி பொறுப்புக்குள் நுழைகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. இதனால் வீட்டுக்கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவது சரியானதா என்பது ஒரு முறைக்கு பல முறை கணக்கு போட்டு யோசித்துக்கொள்ளுங்கள்.
பெரும்பாலும், வீட்டுக்கடன் வாங்குபவர்கள், EMI தொகையினை குறைவாக வைக்க, நீண்ட கால (20-25 வருடங்கள்) கடன்களை தேர்ந்தெடுப்பார்கள். இதனால், EMI குறையுமென்றாலும், நீங்கள் செலுத்தவேண்டிய வட்டி அதிகமாகுமென்பதை மறந்துவிடாதீர்கள். ஆகையால், முடிந்த அளவிற்கு, கடன் செலுத்தும் காலத்தினை குறைவாக வைக்க முயற்சி செய்யுங்கள்.
சொந்த வீடு வாங்கும் போது முடிந்த அளவிற்கு அதிகமாக டவுன் பேமெண்ட் செலுத்துங்கள். எடுத்துக்காட்டாக, 50 லட்சம் கடன், 8% வட்டியில் எடுத்திருந்தால், உங்களது டவுன் பேமெண்ட் 5 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்தினால், வட்டியில் 6 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.
வங்கி அதிகாரிகள் எவ்வளவுதான் கட்டாயப் படுத்தினாலும், அவர்களிடம் இன்சூரன்ஸ் எடுத்து விடாதீர்கள். நீங்கள் வெளியே, அதைவிட குறைவான பிரீமியம் தொகையில் அதே அளவு coverage உள்ள பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்தால், உங்களுக்குப் பின்னர், இன்சூரன்ஸ் பணம் முழுக்க உங்களது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இது, வங்கிகள் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக பணம் பறிக்கும் முயற்சி. பினைக்கு எதிராக இன்சூரன்ஸ் எடுக்க தேவையில்லை, இதேபோல் இன்சூரன்ஸ் எடுக்கும்படி யாரும் உங்களை கட்டாயப் படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முதல் ஐந்து வருட காலகட்டத்தில், வீட்டுக் கடன் ஈஎம்ஐ தொகையில் பெரும்பகுதி (70% - 89%) வட்டிக்கே செல்லும். இந்த காலகட்டங்களில், உங்களுக்கு கிடைக்கும் போனஸ், கமிஷன், இன்சென்டிவ் போன்றவற்றை வீட்டுக் கடனின் அசல் தொகையில் ரீபேமெண்ட் அதாவது principal repayment-க்காக பயன்படுத்தினால், உங்களது வருங்கால வட்டித் தொகை பெரிய அளவில் குறையும்.
உங்கள் வருமானம் ஏற ஏற, உங்களது EMI தொகையையும் அதிகரியுங்கள். உதாரணமாக, நீங்கள் 40 லட்சம் ரூபாய் கடன், 20 வருடங்களுக்கு, 7.5% வட்டியில் எடுத்திருந்தால், EMI தொகையில், 5,000 கூடுதலாக செலுத்தும்போது, 7 வருடங்களுக்கு முன்னதாகவே உங்களது கடன் முடிந்துவிடும். வட்டித் தொகையில் 8 லட்சம் ரூபாய் சேமிக்கவும் முடியும். அல்லது 3 மாதத்திற்கு கூடுதலாக ஒரு ஈஎம்ஐ தொகையை principal repayment-ல் செலுத்தினால் பெரும் தொகையை சேமிக்க முடியும்.
வேறொரு வங்கியில் வீட்டுக் கடன் வட்டி குறைவாக இருந்தால் அந்த வங்கிக்கு உங்களது வீட்டுக் கடனை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். அப்படி மாற்றும்போது, processing charges முதலானவற்றை கவனித்து வாங்கவும். அப்படி மாற்றும் போது வீட்டுக் கடன் ஒப்பந்தத்தை முழுமையாக படித்து அதன் பின்னர் தேர்வு செய்யுங்கள். தேவைப்படுமாயின் ஒரு வழக்குரைஞரின் உதவியை பெறலாம்.
ஆறு முதல் பத்து வருடங்கள் வரையிலான காலகட்டத்தில், உங்களது EMI தொகையில் சுமார் 70% அசலாக இருக்கும். இந்த காலகட்டத்தில், பெரும்பாலான வட்டித் தொகையினை, வங்கிகள் உங்களிடமிருந்து வசூலித்திருக்கும். ஆகையால், pre-payment செய்வது, தற்போது உங்களுக்கு லாபமில்லாத ஒரு செயல்.
உங்களிடம் இருக்கும் கூடுதலான பணத்தை நீங்கள் வேறெங்கிலுமாவது முதலீடு செய்யலாம். அப்படி pre-payment செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அதே தொகையினை வேறெங்கிலும் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் வருமென்பதை கணித்து, அதோடு உங்கள் வீட்டுக்கடன் வட்டி சேமிப்பினை ஒப்பிட்டுப் பார்த்து, அதன் பிறகு சரியான முடிவை தேர்ந்தெடுக்கவும்.
இந்த நேரத்தில், வருமான வரி விலக்கினால், உங்களது வட்டித் தொகையில், வெறும் 2.8% மட்டுமே சேமிப்பாக இருக்கும். இதைவிட கூடுதலாக வருமானம் தரும் வழிகளில் உங்களது முதலீடுகளை நீங்கள் செய்யலாம்.
நீங்கள் ஓரளவிற்கு ரிஸ்க் எடுப்பவராக இருந்தால், சந்தை சார்ந்த முதலீடுகளில் (நல்ல நிறுவனங்களின் பங்குகள் / மியூச்சுவல் பண்ட்) உங்கள் பணத்தை போடலாம். தயவு செய்து பங்குச்சந்தை டிரேடிங் போன்ற முறைகளை தவிருங்கள். அது உங்கள் பணத்திற்கும், மனத்திற்கும் நல்லது.
கடைசியாக பதினோரு வருடங்களுக்கு மேலான காலத்தில் உங்களது EMI தொகையில் சுமார் 80% க்கும் மேல் அசலாக இருக்கும்.இந்த சமயத்தில் pre-payment என்பது கூடவே கூடாது. இப்படி செய்தால், வங்கிக்கு தான் லாபம். ஆகவே, செய்யவே செய்யாதீர்கள்.
பணத்தை விட மேலான ஒரு பயன் (மன அமைதி, சீக்கிரம் கடனை அடைத்தால் நிம்மதி போன்றவை) இருந்தால் மட்டுமே இந்த காலகட்டங்களில் pre-payment செய்யவும். அவ்வாறு இல்லையென்றால், உங்களது பணத்தினை, நல்ல வருமானம் தரும் முதலீடுகளில் போடவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications