பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா: 10000 ரூபாய் கடன் பெறும் சிறப்பு சலுகை..!

இந்தியாவில் அனைவருக்கும் வங்கி சேவைகளும், நிதியுதவிகளும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் தான் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா வங்கி கணக்குகள்.

ஜன்-தன் யோஜனா வங்கி கணக்கு மூலம் பல நன்மைகளை ஏழை எளிய மக்களும், வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் ஊழியர்கள் பெற்று வரும் நிலையில் ஜீரோ பேலென்ஸ் கணக்காக இருந்தாலும் 10000 ரூபாய் வித்டிரா செய்யும் சேவை எத்தனை பேருக்கு தெரியும்.

அது எப்படி..? வாங்கப் பார்ப்போம்.

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்கள் பல நிதி நன்மைகளைப் பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை ஆகஸ்ட் 15, 2014 அன்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிலையில், ஆகஸ்ட் 28, 2014 அன்று பொதுத்துறை வங்கிகளில் தொடங்கப்பட்டது.

வங்கி சேவைகள்

வங்கி சேவைகள்

அடிப்படை வங்கி சேவை முதல் பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதிச் சேவைகளை மக்கள் குறைந்த கட்டணத்தில் சொல்லப்போனால் பல சேவைகள் இலவசமாக இந்தப் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு மூலம் மத்திய அரசு அளிக்கப்படுகிறது.

ஜீரோ பேலன்ஸ் சேவை

ஜீரோ பேலன்ஸ் சேவை

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஜீரோ பேலன்ஸ் சேவை அளிக்கப்படுகிறது. பெரும்பாலான வங்கி கணக்கில் அடிப்படையாகக் குறிப்பிட்ட தொகையை மெயின்டெயின் செய்ய வேண்டும்.

ஓவர் டிராஃப்ட் (OD) வசதி

ஓவர் டிராஃப்ட் (OD) வசதி

ஆனால் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கில் அப்படி இல்லை, ஜீரோ பேலென்ஸ்-க்கு அனுமதிக்கப்படுகிறது. ஆயினும் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரூ.10,000 வரை ஓவர் டிராஃப்ட் (OD) வசதியைப் பெற முடியும்.

10,000 ரூபாய் வரை

10,000 ரூபாய் வரை

ஓவர் டிராஃப்ட் வரம்பு முன்பு ரூ. 5,000 ஆக இருந்த நிலையில் பின்னர் ரூ.10,000 ஆக அதாவது இரு மடங்காக மத்திய அரசு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2,000 ரூபாய் வரையிலான ஓவர் டிராஃப்ட் தொகைக்கு எவ்விதமான நிபந்தனைகளும் இல்லாமல் அளிக்கப்படுகிறது.

3 விதிகள்

3 விதிகள்

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கில் அளிக்கப்பட்டும் இந்த ஓவர் டிராஃப்ட் கடன் அளவு 3 விதிகளின் கீழ் அளிக்கப்படுகிறது.

1.) சராசரி மாத இருப்பின் 4 மடங்கு
2.) அல்லது, கடைசி 6 மாதங்களில் கணக்கில் கிரெடிட் கூட்டுத் தொகைகளில் 50%
3.) அல்லது, ரூ 10,000/- இதில் எது குறைவான தொகையோ அதை அளிக்கப்படும்.

6 மாதங்கள்

6 மாதங்கள்

ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற, உங்கள் ஜன்தன் கணக்குக் குறைந்தது 6 மாதங்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் ரூ.2,000 வரை மட்டுமே ஓவர் டிராஃப்டைப் பெற முடியும். மேலும் ஓவர் டிராப்டுக்கான வயது வரம்பு 65 வயது வரையில் உயர்த்தப்பட்டுள்ளது, அதாவது 65 வயது வரையில் ஜன்தன் கணக்கு வைத்துள்ளவர்கள் கடன் பெற முடியும்.

 முக்கியச் சேவைகள்

முக்கியச் சேவைகள்

PMJDY கணக்குகள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), அடல் பென்ஷன் யோஜனா (APY), மைக்ரோ யூனிட்ஸ் டெவலப்மென்ட் & ரிஃபைனான்ஸ் ஏஜென்சி வங்கி (MUDRA) திட்டத்திற்குத் தகுதியுடையவை.

விபத்து காப்பீடு

விபத்து காப்பீடு

PMJDY கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் RuPay கார்டில் ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இது 8.8.2018க்குப் பின் திறக்கப்படும் புதிய PMJDY கணக்குகளுக்கு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

எப்படிப் பெறுவது

எப்படிப் பெறுவது

பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா கணக்கு வைத்துள்ளவர்கள் அவர்களுடைய வங்கி கணக்கிற்குச் சென்று படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் வங்கியின் மென்பொருள் கட்டமைப்பு உங்களுக்கு ஓவர் டிராஃப்ட் (OD) வசதி மூலம் எவ்வளவு கடன் அளிக்க முடியும் என்பதைச் சொல்லிவிடும். நீங்கள் உரிய தொகையைப் பெற ஒப்புதல் அளித்தால் அடுத்த சில நிமிடத்தில் பணத்தைப் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+