நம் நாட்டில் இருக்கும் வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கும், சேவிங்ஸ் அக்கவுண்ட்களுக்கும் வட்டி விகிதங்களை வழங்குகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த வட்டி விகிதங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்தால் அதற்கான வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். இதன் மூலம் முதலீட்டு முடிவுகளை எடுக்கும் போது உங்களுடைய வருமானம் முதலீட்டு காலத்தின் அடிப்படையில் எவ்வளவாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.
சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்கள்: சேமிப்பு கணக்குகள் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று. இருப்பினும் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் பல ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்பட்டு உட்பட்டு வந்துள்ளன.

2010-ஆம் ஆண்டுக்கு முந்தைய முறை: 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு ஒருவருடைய சேவிங்ஸ் அக்கவுண்டில் அந்த மாதத்தின் 10-ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்தின் கடைசி தேதி வரை இருக்கும் குறைந்த பேலன்ஸ் தொகையின் அடிப்படையில் வட்டி வழங்கப்பட்டது. உதாரணமாக மாதத்தின் 10-ஆம் தேதி அன்று உங்களுடைய பேலன்ஸ் 1000 ரூபாயாகக் குறைந்தால் அதற்கு முன்பு உங்களுடைய பேலன்ஸ் அதிகமாக இருந்தாலும் அந்த 1000 ரூபாய்க்கு மட்டுமே வட்டி வழங்கப்படும்.
2010-ஆம் ஆண்டுக்கு பிந்தைய முறை: 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு RBI சேவிங்ஸ் அக்கவுண்டின் வட்டி கணக்கீட்டை மாற்றியமைத்தது.
சேமிப்பு கணக்கு வட்டி விகித ஃபார்முலா:
வட்டி = தினசரி பேலன்ஸ் × வட்டி விகிதம் × நாட்களின் எண்ணிக்கை / 365 × 100
இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.. வருண் என்ற நபர் ஆண்டுக்கு 4% வட்டி விகிதத்தைப் பெறும் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
மே 1-ஆம் தேதி, அவரது பேலன்ஸ் ரூ.200,000. மே 6-ஆம் தேதி, அவர் ரூ.60,000 ரூபாயை எடுத்துவிட்டார். அப்படியானால் அக்கவுண்டில் மீதமுள்ள தொகை ரூ.140,000-ஆகக் குறைந்துவிடும். மே 10-ஆம் தேதி, அவர் ரூ.40,000 ரூபாயை மீண்டும் டெபாசிட் செய்கிறார். அப்படியானால் அக்கவுண்டில் மீதமுள்ள தொகை ரூ.180,000 ஆக உயரும். மே 20-ஆம் தேதிக்குள், மேலும் பல பரிவர்த்தனைகளுக்குப் பிறகு அவரது பேலன்ஸ் ரூ.195,000 ஆக உயர்கிறது.
வட்டி கணக்கீடு:
மே 1 முதல் 5 வரை (5 நாட்கள்), ரூ.200,000 வட்டி = ரூ.109.59.
மே 6 முதல் 9 வரை (4 நாட்கள்), ரூ.140,000 வட்டி = ரூ.61.37.
மே 10 முதல் 19 வரை (10 நாட்கள்), ரூ.180,000 வட்டி = ரூ.197.26.
மே 20 முதல் 31 வரை (12 நாட்கள்), ரூ.195,000 வட்டி = ரூ.256.44.
ஆக, மே மாதத்தில் வருண் சம்பாதிக்கும் மொத்த வட்டி ரூ.624.66 ஆக இருக்கும்.
வட்டி எப்போது வரம் வைக்கப்படும்? வங்கிகள் தினசரி அடிப்படையில் வட்டியை கணக்கிட்டாலும்.. வட்டி வருமானம் காலாண்டு அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. எனவே உங்களுடைய பணத்திற்கு தினமும் வட்டி கிடைக்கும் என்று எண்ணாதீர்கள். உங்களுடைய வட்டி வருமானம் உங்கள் கணக்கில் பிரதிபலிக்க சில மாதங்கள் ஆகலாம்.
பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி கணக்கீடு: சேமிப்பு கணக்குகளுடன் ஒப்பிடும்போது பிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அவை லாக்கின் காலத்துடன் வருகின்றன. எனவே முதிர்வு காலம் வரை உங்களுடைய பிக்சட் டெபாசிட்டை வைத்திருந்தால் எப்படி வட்டியை கணக்கிடுவது? என்பதைப் பார்ப்போம்.
ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டியை புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.
முதலாவதாக சூர்யா என்ற நபர் 1 வருட காலத்திற்கு 2 லட்சம் ரூபாயை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஆண்டுக்கு 8% வட்டி விகிதம் கிடைக்கிறது என்றால் கீழ் காணும் ஃபார்முலாவைப் பயன்படுத்தி எப்படி வட்டி வருமானத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.
FD வட்டி விகித ஃபார்முலா:
வட்டி = முதலீட்டு தொகை × வட்டி விகிதம் × முதலீட்டு காலம் / 365 × 100
சூர்யாவின் முதலீட்டில்..
முதலீட்டு தொகை = ரூ.200,000
வட்டி விகிதம் = 8%
முதலீட்டு காலம் = 1 வருடம் (365 நாட்கள்)
எனவே, சம்பாதித்த வட்டி இருக்கும்
வட்டி = 200,000 × 8 × 365 / 365 × 100 = ரூ.16,000.
முதிர்ச்சியின் போது, வரிகள் தவிர்த்து, சூர்யா ரூ.216,000 பெறுவார்.
அதுவே சூர்யா 6 மாதங்களுக்கு முன்னராக தனது 2 லட்ச ரூபாய் முதலீட்டை திரும்ப பெற நினைத்தால்.. அந்த வங்கியில் 6 மாத பிக்சட் டெபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறதோ அதே வட்டி விகிதம் வழங்கப்படும். மேலும் முன்கூட்டியே திரும்ப பெறுவதற்கு 0.5% அபராதமும் விதிக்கப்படுகிறது.
அப்படி பார்த்தால் 6 சதவீத வட்டியுடன் 0.5% அபராதத்தை கழிக்கும்போது 5.5 சதவீதமாக இருக்கும். மேற்கண்ட அதே பார்முலாவைப் பயன்படுத்தி கணக்கிட்டால் 11,000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். சூர்யா முதுர்ச்சியின் போது 211,000 ரூபாயை பெற்றுக்கொள்வார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications