இந்தியாவில் ஆதார் மற்றும் பான் அட்டையை போலவே மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு. இதன் மூலம் மக்கள் மலிவு விலையில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
அதிலும் தற்போது மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ஒரே நாடு ஒரே அட்டை முறை வந்த பிறகு, இது இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பிய கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.
எனினும் இன்றைய காலகட்டத்தில் ரேஷன் அட்டை ஏதேனும் திருத்தம் என்றாலோ அல்லது பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றிற்கு அலைகின்றனர். ஆனால் இன்றைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக் கொள்ள முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
என்னென்ன பார்க்க போகிறோம்?
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ரேஷன் கார்டில் எப்படி புதிய குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது? எப்படி நீக்குவது? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை? வாருங்கள் பார்க்கலாம். உதாரணத்திற்கு உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பெயரை எப்படி ரேஷன் கார்டில் இணைப்பது?
என்ன ஆவணங்கள் தேவை?
குழந்தையின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க வேண்டும் எனில், அதற்காக குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் கார்டு. குழந்தைக்கு ஆதார் கார்டு இருப்பின் குழந்தையில் ஆதார் கார்டு என அனைத்தும் கொடுக்க வேண்டும். இதே புதியதாக திருமணமான பெண்ணாக இருப்பின், திருமண சான்றிதழ், அவரின் ஆதார் அட்டை, பெற்றோரின் குடும்ப அட்டை, பெற்றோர் அட்டையில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட சான்று உள்ளிட்டவை தேவைப்படும்.
பதிவேற்றம் செய்ய வேண்டியவை?
- ஆதார் கார்டு
- பேங்க் பாஸ்புக்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- மின்சார கட்டண ரசீது/ தண்ணீர் வரி/
- டெலிபோன் பில்
- வருமான சான்று
- Receipt of ration card centre
- Photo 1 - ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களின் போட்டோ 1
ஆன்லைனில் எப்படி செய்வது?
சரி எப்படி ஆன்லைனில் பெயரை சேர்ப்பது? இதற்காக நீங்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்று இருக்கும். அதில் உறுப்பினர் பெயர் சேர்க்க அல்லது நீக்க என சேவைகளுக்கான ஆப்சன் இருக்கும். அதில் உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்து, பின்னர் உங்களது ரேஷன் அட்டையில் கொடுத்த மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
பெயர் சேர்க்க
இதனை பதிவு செய்த பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஆக உங்களது ஓடிபியினை கொடுத்து கிளிக் செய்ய வேண்டும். அது மற்றொரு பக்கத்திற்கு செல்லும். அதில் ஏற்கனவே உங்களது குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். அந்த விவரங்களுக்கு கீழாக குடும்ப உறுப்பினர் சேர்க்கை என்பதை கிளிக் செய்யவும்.
என்னென்ன விவரங்கள்
அதில் name என்ற இடத்தில் கேப்பிட்டல் லெட்டரில் ஆங்கிலத்தில் பெயரை கொடுக்கவும். அதன் பிறகு பெயர் என்ற இடத்தில் தமிழில் பெயரை கொடுக்கவும். அதன் பிறகு பாலினம் என்பதில் ஆணா/ பெண்ணா என்பதை தேர்தெடுக்கவும். அதன் பிறகு பிறந்த தேதி, உறவு முறை என்ற பாக்சில் கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஆதார் நம்பர் கொடுத்து, அதன் பிறகு ஆதாரினை பதிவேற்றம் செய்ய வேண்டும். (1 MB இருக்க வேண்டும்). பதிவேற்றம் செய்த பிறகு உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
குறிப்பு எண் விவரம் கொடுக்க வேண்டும்
இதன் பிறகு நீங்கள் கொடுத்த விவரங்களை ஒரு முறைக்கு இரு முறை பார்த்து, தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு உறுதிபடுத்தல் என்ற பாக்ஸினை கிளிக் செய்து, பதிவு செய் என்பதை கொடுக்க வேண்டும். இதனை கொடுத்த பிறகு நீங்கள் சரியாக செய்திருந்தால் உங்களது கோரிக்கை வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது. என குறிப்பு எண் என ஒரு நம்பர் வரும். இதனை ஸ்கீரி ஷாட் அல்லது பிடிஎஃப் ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.
என்ன நிலை?
இதன் பிறகு மீண்டும் ஆரம்பத்தில் சென்ற https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்ற , அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதை கிளிக் செய்து, அதில் நீங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்த நம்பரை கொடுத்து செக் செய்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய ஆவணங்கள், விவரங்கள் சரியென்றால், அதிகாரிகள் அதனை வெரிபிகேஷன் செய்து, உங்களது முகவரிக்கு ரேஷன் கார்டினை அனுப்புவார்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications