ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம், உலக நாடுகளின் பொருளாதாரத்தையே உலுக்கி வரும் நிலையில், அதன் தாக்கம் உங்கள் வீட்டு சமையலறையிலும் எதிரொலிக்க தொடங்கிவிட்டது. தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் விலையானது எகிறி வருகிறது. இந்த நிலை இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்கும் என்ற நிலையே காணப்படுகிறது.
ஒருபுறம் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் மேகங்கள் எரிபொருள் இறக்குமதியில் சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சப்படும் சூழலில், மறுபுறம் இந்திய அரசு சமையல் எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் மார்ச் 31-க்குள் இ-கேஒய்சி (e-KYC) முடிக்கவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் இனி வராதா? இந்த கேள்வியானது இப்போது ஒவ்வொரு குடும்பத்தலைவியின் மனதிலும் எழுந்துள்ளது. சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில், உங்கள் கேஸ் மானியத்தையும் இணைப்பையும் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் செய்ய வேண்டிய அந்த ஒரு முக்கியமான வேலை என்ன? பயோமெட்ரிக் அங்கீகாரம் ஏன் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது? அதை எப்படி செய்வது வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.
இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், அனைத்து உள்நாட்டு எல்பிஜி (LPG) நுகர்வோரும் தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (e-KYC) பூர்த்தி செய்வது தற்போது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் கேஸ் அலுவலகத்திற்கு சென்று நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் எரிவாயு நிறுவனத்தின் (Indane, HP, அல்லது Bharat Gas) அதிகாரப்பூர்வ மொபைல் ஆப் மற்றும் Aadhaar FaceRD ஆப் ஆகியவற்றை பயன்படுத்தி, உங்கள் வீட்டிலிருந்தே முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் இந்த சரிபார்ப்பை எளிதாக செய்து முடிக்கலாம்.
ஒருவேளை உங்களால் ஆன்லைனில் செய்ய முடியாவிட்டால், உங்கள் எல்பிஜி விநியோகஸ்தரை நேரில் அணுகியும் இதை செய்து கொள்ளலாம். இது குறித்து மேற்கொண்டு முழுமையாக தெரிந்து கொள்ள https://pmuy.gov.in/e-kyc.html என்ற அதிகாரப்பூர்வ தளத்தை பார்க்கலாம். அதுவும் இல்லையேல் கட்டணமில்லா உதவி எண் ஆன (Toll-Free): 1800 2333 555 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இ-கேஒய்சி (e-KYC) நடைமுறையானது, எரிவாயு இணைப்புகள் உண்மையான பயனாளர்களை சென்றடைவதை உறுதி செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கவும், மானிய பலன்கள் தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்கிறது. ஆக உங்களுடைய மொபைலில் இருந்தே ஆதார் ஃபேஸ் ஆர் டி ஆப் மூலம் அல்லது மற்ற ஆப்கள் மூலம் அப்டேட் செய்யலாம்.
ஸ்டெப் 1: முதலில் உங்களுடைய ஸ்மார்ட்போனில் Play Store சென்று Aadhaar FaceRD (UIDAI வெளியீடு) ஆப்பை இன்ஸ்டால் செய்யவும். அதன் பிறகு பிறகு, உங்கள் கேஸ் நிறுவனத்திற்கு உரிய ஆப்பை (உதாரணமாக IndianOil One) தரவிறக்கம் செய்து, உங்கள் நுகர்வோர் எண் (Consumer ID) அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் லாக்-இன் செய்யவும்.
ஸ்டெப் 2: ஆப்பிற்குள் சென்றதும், மெனுவில் அல்லது ப்ரொபைல் பகுதியில் Re-eKYC அல்லது Aadhaar e-KYC என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அங்கே உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு Face Scan கொடுக்கவும்.
ஸ்டெப் 3: இப்போது தானாகவே Aadhaar FaceRD கேமரா திரையில் தோன்றும். நீங்கள் நேராக கேமராவை பார்த்து, கண்ணை ஒரு முறை இமைக்கவும். முகத்தை மிக அருகிலோ அல்லது தூரத்திலோ வைக்காமல் சரியான வட்டத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். முகம் சரியாக பொருந்தினால், பச்சை நிறத்தில் டிக் மார்க் வரும். இதை செய்யும் போது நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் இருக்கவும்.
ஸ்டெப் 4: ஸ்கேன் முடிந்ததும், உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். கடைசியாக Submit பட்டனை அழுத்தினால், உங்கள் e-KYC கோரிக்கை ஏற்க பட்டுவிடும். சில நாட்களில் உங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகிவிடும்.
More From GoodReturns

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

சிலிண்டர் புக் பண்ணியும் வரலையா? இருக்கவே இருக்கு மினி எல்பிஜி!! அதுவும் 5 நிமிஷத்துல கிடைக்கும்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications