ஆன்லைனில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி.. விபரம் இதோ..!

இன்றைய காலகட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை பெற மட்டும் அல்லாது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாகவும் ரேஷன் அட்டைகள் பயன்படுகிறது.

இப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில் ஏதேனும் திருத்தம், மாற்றம் எனில், இதற்காக பல நாட்கள் அலைய வேண்டிய நிலை மாறி, தற்போது இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக் கொள்ளும் அளவுக்கு டிஜிட்டல் பங்களிப்பு என்பது ஊடுறுவியுள்ளது.

பொதுவாக இது போன்ற முக்கிய ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் எனில், தாலுகா அலுவலகம் சென்று தான் மாற்ற வேண்டியிருக்கும். அதற்காக பல நாட்கள் நடையாக நடக்க வேண்டியிருக்கும். ஆனால் இன்றோ அப்படியில்லை. அனைத்துத்துறைகளும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே எப்படி ரேஷன் கார்டில் புதிய பெயரை சேர்ப்பது என பார்த்தோம். இன்று எப்படி ஒரு பெயரை நீக்குவது என பார்ப்போம்.

ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம்

ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம்

இன்று ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயரை எப்படி ஆன்லைனில் நீக்கம் செய்வது என பார்க்க இருக்கிறோம். பொதுவாக புதிததாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமான சென்றால் தங்களுக்கென புதிய கார்டு வாங்குவற்காக பெயர் நீக்கம் செய்வார்கள். அல்லது ஒரு குடும்பத்தில் இருந்த பெண்களை வேறோரு குடும்பத்திற்கு திருமணம் செய்து கொடுத்தாலோ அல்லது வேறு ஏதேனும் பல காரணத்துக்காக அவரின் பெயரை நீக்கம் செய்வார்கள். சரி அதனை எப்படி ஆன்லைனில் நீக்கம் செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

லாகின் செய்யுங்கள்

லாகின் செய்யுங்கள்

இதற்காக நீங்கள் அரசின் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதன் கீழ், குடும்ப உறுப்பினர் நீக்க என்பதை கிளிக் செய்யவும். இதன் பிறகு உங்களது மொபைல் நம்பரை கேட்கும். அதில் உங்களது ரேஷன் கார்டில் கொடுத்த நம்பரை கொடுத்து, அதன்பிறகு அதன் கீழுள்ள கேப்ட்சா என்ற எழுத்துகளை பதிவிட்டு கிளிக் செய்யவும். இதன் பிறகு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும்.

குடும்ப உறுப்பினர் நீக்க

குடும்ப உறுப்பினர் நீக்க

இதன் பிறகு ஓடிபியை கொடுத்து கிளிக் செய்தால், அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதில் ஏற்கனவே உங்களது குடும்ப அட்டையில் யார் யார் பெயர் உள்ளது. அவர்களது விவரம் உள்ளிட்ட பல விவரங்கள் இருக்கும்.

அதற்கும் கீழாக குடும்ப உறுப்பினர் நீக்க என்ற ஆப்சன் இருக்கும். நீங்கள் பெயரை நீக்க வேண்டும் எனில், அதனை கிளிக் செய்யவும்.

இதன் பிறகு மற்ற ஆவணங்கள் என்ற பாக்ஸ் இருக்கும். அதில் இறப்பு சான்று, திருமண சான்றிதழ், தத்தெடுப்பு சான்றிதழ், இதர சான்றிதழ்கள் என இருக்கும். ஆக அவற்றில் எது உங்களுக்கு பொருத்தமானதோ, அதனை கிளிக் செய்து கொடுக்க வேண்டும்.

வேறு என்ன சான்றிதழ்?

வேறு என்ன சான்றிதழ்?

ஒரு வேளை உங்கள் பெண் திருமணமாகி சென்றால், அவரின் பெயரை நீக்க திருமண சான்றிதழை கொடுக்கலாம். இதே வயதான முதியவர்கள் இறந்துவிட்டால், இறப்பு சான்றிதழை கொடுத்து நீக்கிக் கொள்ளலாம். இது தவிர கீழ்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.

ஆக மேற்கூறிய சான்றிதழுடன் கீழ்கண்ட ஏதேனும் ஒரு ஆவணத்தினை கொடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளவும். இது 1 எம்பி அளவு இருக்க வேண்டும்.

  • வாக்காளர் அடையாள அட்டை
  • சிலிண்டர் ரசீது
  • கேஸ் புத்தகம்
  • மின்சார கட்டண ரசீது
  • பான் கார்டு
  • வீட்டு பத்திரம்
  • வாடகை ஒப்பந்த பத்திரம்
  • வருமான சான்று
நீக்கத்திற்கான காரணம் என்ன?

நீக்கத்திற்கான காரணம் என்ன?

அதன் பிறகு நீங்கள் எதற்காக இந்த பெயர் நீக்கம் செய்ய விரும்புகிறீர்கள் என்ற ஆப்சன் இருக்கும். அதில் பெயர் நீக்கம் எதற்காக என்பதையும் குறிப்பிட வேண்டும்.

அதன் பிறகு கீழாக பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டிய கார்டில் உள்ள பெயர்கள் அனைத்தும் வரும். அதில் யார் பெயரை நீக்கம் செய்ய வேண்டுமோ, அந்த பெயருக்கு நேராக இருக்கும் ஒரு சிறிய பாக்ஸினை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உறுதி படுத்துதல் என்ற ஆப்சன் கீழ் உள்ள பாக்ஸினை கிளிக் செய்து பதிவேற்றம் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய

அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய

இதனை செய்வதற்கு முன்பு நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியா என, ஒரு முறைக்கு பல முறை சரி பார்த்து கொடுங்கள். அவை சரியாக இருக்கும் பட்சத்தில் தங்களது கோரிக்கை வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது என வரும். அதோடு உங்களுக்கான குறிப்பு எண்ணும் வரும். அதனை பிடிஎஃப் ஆக அல்லது ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் உங்களது கோரிக்கை என்ன நிலையில் உள்ளது என இந்த நம்பரை பயன்படுத்திக் தெரிந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் மேற்கண்ட இணையப் பகுதியின் ஹோம் பக்கத்திற்கு சென்று, அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+