கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மிகவும் வசதியான ஒன்றாக தற்போது கிரெடிட் கார்டுகள் மாறிவிட்டன. ஆனால், அவற்றில் மறைந்திருக்கும் ஒரு பெரிய ஆபத்து என்றால் கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதங்கள் தான். இன்றெல்லாம் பல கிரெடிட் கார்டு வழங்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இதனால் பல பயனர்களும் கவரப்பட்டு வாங்கி விடுகின்றனர். ஆனால் அதன் பின்னால் மறைந்திருக்கும் வட்டி விகிதங்களை பற்றி யாருமே தெரிந்து கொள்வதில்லை. இந்த பதிவில் கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதம் பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கிரெடிட் கார்டுகள் பணம் செலுத்துவதற்கான வசதியான ஒன்றாக இருந்தாலும், அவற்றின் அதிக வட்டி விகிதங்கள் நிதிச் சிக்கலுக்கு வழிவகுக்கும். இதில் வட்டி மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு நிறுவனங்கள், சில மறைமுக கட்டணங்களையும் விதிக்கின்றன. அவற்றையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உதாரணமாக பெட்ரோல் பேங்கில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் ஒரு சில நிறுவனங்கள் கட்டணத்தை வசூலிக்கின்றன. இது பல பயனர்களுக்கும் தெரியாது. எனவே கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதத்தையும், மறைமுக கட்டணங்களையும் பற்றி தெரியாமல் ஒருவர் கிரெடிட் கார்டுகளை வாங்கக்கூடாது.
கிரெடிட் கார்டு வட்டி விகிதம் என்றால் என்ன?: கிரெடிட் கார்டு வட்டி விகிதம் என்பது, நீங்கள் செலுத்தாத நிலுவைத் தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் விதிக்கும் கட்டணமாகும். பொதுவாக, கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருக்கும். இவை வருடத்திற்கு 24 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்கலாம்.
கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதம் பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது? கிரெடிட் கார்டு பில்லை முழுவதுமாக செலுத்தத் தவறினால் நிலுவைத் தொகை மீது வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டியை ஒரு மாதத்திற்கு கட்டத் தவறினாலும் கூட மறு மாதத்திற்கு அந்த வட்டியையும் நிலுவைத் தொகையும் சேர்த்து மீண்டும் வட்டி விதிக்கப்படுகிறது.
உதாரணமாக வள்ளி என்ற பெண் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தனது கிரெடிட் கார்டில் 7,000 ரூபாய் செலவு செய்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த கிரெடிட் கார்டின் APR விகிதம் 12%
முதலில், இந்த வருடாந்திர வட்டியை மாத வட்டியாக மாற்ற வேண்டும். ஏனென்றால், வட்டி பொதுவாக மாத அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது. 1 வருடத்தில் 12 மாதங்கள் இருப்பதால், வருடாந்திர வட்டி விகிதத்தை 12-ஆல் வகுக்க வேண்டும்.
12% / 12 = 1%
எனவே, இந்த உதாரணத்தில், வள்ளி மாதத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டி இருக்கும். அடுத்து, நிலுவைத் தொகையை கருத்தில் கொள்ள வேண்டும். நிலுவைத் தொகை என்பது உங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்தப்படாத மொத்த தொகையாகும். நிலுவைத் தொகை ரூ.7,000 என்று வைத்துக்கொள்வோம்.
இப்போது, மாதாந்திர வட்டி விகிதத்தை நிலுவைத் தொகையால் பெருக்கவும்.
1% x ரூ.7,000 = 1/100 x ரூ.7,000 = ரூ.70
எனவே, இந்த உதாரணத்தில், ஒவ்வொரு மாதமும் வள்ளி ரூ.70 மாதாந்திர வட்டி செலுத்த வேண்டும்.
மேலும் மேற்கண்ட விவரம் ஒரு உதாரணம் மட்டுமே. இதை வைத்து உங்களுடைய வட்டி விகிதம் மற்றும் பிற விவரங்களை வைத்து மாதாந்திர வட்டியை நீங்களே கால்குலேட் செய்து கொள்ள முடியும்.
இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் கடனை அடைப்பதற்கு பதிலாக வட்டி செலுத்துவதற்காகவே பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
கிரெடிட் கார்டு வட்டி விகிதத்தை எவ்வாறு தவிர்க்கலாம்?:
முழு பில் தொகையையும் காலக்கெடுவுக்குள் செலுத்தி விடுங்கள்: உங்கள் கிரெடிட் கார்டு பில்லை ஒவ்வொரு மாதமும் முழுவதுமாக செலுத்துவதே, வட்டி விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி.
கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துங்கள்: தேவையான செலவுகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டைப் பயன்படுத்துங்கள். தேவையற்ற செலவுகளுக்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டாம்.
குறைந்த வட்டி விகிதம் உள்ள கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யுங்கள்: கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிறுவனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். குறைந்த வட்டி விகிதம் வழங்கும் கார்டைத் தேர்வு செய்யுங்கள்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications