இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் ஏதேனும் பொருட்களை வாங்கினால்.. உங்களின் சார்பாக வங்கிகள் பணத்தைச் செலுத்தும். அதன் பின்னர் நீங்கள் வங்கிக்கு வட்டியுடன் பணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான சிக்கல் என்றால் அதற்கு வசூலிக்கப்படும் வட்டி. மற்ற கடன்களை விட கிரெடிட் கார்டு கடன்களுக்கு வட்டி அதிகம். கிரெடிட் கார்டு பயனர்கள் வட்டி தொகையை எப்படி மிச்சப்படுத்தலாம் என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

கிரெடிட் கார்டு வட்டி விகிதம் என்றால் என்ன?: கிரெடிட் கார்டு வட்டி விகிதம் என்பது ஏபிஆர் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செலவு செய்வதற்கு வங்கிகள் வசூலிக்கும் வட்டித் தொகை இதுவாகும். இந்த வட்டி வங்கிக்கு வங்கி மாறுபடலாம். மேலும் நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டின் வகையைப் பொருத்தும் மாறுபடும்.
எனவே நீங்கள் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் முழுமையாக செலுத்தாமல் இருந்தால் நிலுவைத் தொகையின் மீது தினசரி அடிப்படையில் வட்டி விதிக்கப்படும். உதாரணமாக ரூ.10,000 நிலுவைத் தொகைக்கு 18 சதவீதம் ஏபிஆர் விகிதம் இருந்தால் மாத வட்டி தோராயமாக 1.5 சதவீதமாக இருக்கும். ரூ. 10,000-த்திற்கு 150 ரூபாய் ஒவ்வொரு மாதமும் வட்டி செலுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டு வட்டி எப்போது வசூலிக்கப்படும்?: உங்கள் கிரெடிட் கார்டு ரிப்போர்ட் உருவாக்கப்பட்டவுடன் வட்டி வசூலிக்கப்படும். அதோடு நீங்கள் கடன் வாங்கிய தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். உரிய தேதிக்குள் முழு நிலுவைத் தொகையை நீங்கள் செலுத்தாமல் இருந்தால் நிலுவைத் தொகைக்கும் சேர்த்து வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
சிலர் ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு பில் வரும்போது குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்திக்கொண்டே வருவார்கள். அப்படி இருந்தால் மீதமுள்ள தொகைக்கு வட்டி வசூலிக்கப்படும். உதாரணமாக ஒரு மாதத்திற்கான உங்கள் கிரெடிட் கார்டு பில் 10,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம்.
குறைந்தபட்ச நிலுவைத் தொகை ரூ.1,000 என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தினால் மீதமுள்ள 9,000 ரூபாய்க்கு வட்டி சேரத் தொடங்கும். எனவே உங்கள் கிரெடிட் கார்டு பில் அடுத்த மாதம் வரும்போது ரூ.9000 + வட்டி தொகை கணக்கிடப்பட்டு வந்திருக்கும். அதனால் தான் ஒவ்வொரு மாதமும் முழு நிலுவை தொகையையும் செலுத்த வேண்டும்.
சிலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம்-மில் இருந்து பணம் எடுக்கின்றனர். இதை செய்வதனால் பரிவர்த்தனை நடந்த நாளில் இருந்து வட்டி வசூலிக்கப்படும். கிரெடிட் கார்டு வழங்கும் நாளிலிருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வட்டி இல்லா காலம் இருக்கும். அப்போது நீங்கள் செலவு செய்து விட்டு வட்டியே இல்லாமல் வங்கிக்கு கடனை திருப்பிச் செலுத்தலாம். ஆனால் நீங்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தால் அந்த சலுகை காலம் முடிவு பெறாமல் இருந்தாலும் அன்றைய நாளிலிருந்து வட்டி வசூலிக்கப்படும்.
வட்டியைச் சேமிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?: முடிந்த வரையில் உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த முயற்சி செய்யுங்கள். குறைந்தபட்ச தொகையை செலுத்துவதை தவிர்த்து பழகுங்கள். பில்லிங் சைக்கிள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். முன்னதாக பணம் செலுத்துவது தேவையின்றி கட்டணம் செலுத்துவதையும் வட்டி தொகையையும் குறைக்க உதவும். கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதனாளும் அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்படலாம். அதுவும் சலுகைகாலம் முடிவதற்குள் இத்தகைய சுமையில் சிக்காமல் இருக்க ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும். குறைந்த ஏபிஆர் உள்ள கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுப்பது, வட்டி சேமிக்க உதவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications