முன்பெல்லாம் பொருட்கள் வாங்குவதற்கும் பிற செலவுகள் செய்வதற்கும் மக்கள் அதிகமாக பணத்தை தான் பயன்படுத்தினர். ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் பணப்பரிவர்த்தனை செயல்முறைகள் மிகவும் எளிமையானதாகிவிட்டன. இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் முதல்.. கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவது வரை அனைத்திற்கும் UPI பெமெண்ட் தளங்களை தான் பயன்படுத்துகின்றனர். இது வசதியாக இருப்பதால் அதில் ஏதேனும் தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
உதாரணமாக தவறான UPI ஐடிக்கு பணம் அனுப்பிவிடுவது.. உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். எனவே இது போன்ற விஷயங்கள் நடந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பணத்தை திரும்ப பெறுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்க வேண்டும்? என்பது குறித்த விபரங்களை விரிவாகப் பார்ப்போம்.

நீங்கள் UPI மூலம் பணத்தைச் செலுத்தியிருந்தால், சரியான UPI ஐடிக்கு பணம் அனுப்பப்பட்டதா என்பதை உடனடியாகச் சரிபார்க்க வேண்டியது அவசியம். பணம் தவறான ஐடிக்கு பணம் சென்று விட்டால் , விரைவாகச் செயல்படுவது பணத்தைத் திரும்பப் பெற உதவும்.
தவறாக யாரோ ஒருவர் UPI ஐடிக்கு பணம் அனுப்பி விட்டால் என்ன செய்ய வேண்டும்?: தவறாக யாரோ ஒருவருடைய UPI ஐடிக்கு பணம் அனுப்பி விட்டால்.. அதனைக் கண்டறிந்த பிறகு உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை அல்லது UPI சேவை வழங்குனரைத் தொடர்பு கொள்ளலாம். உதாரணமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற சேவை வழங்குனரின் கஸ்டமர் கேர் நம்பருக்கு அழைக்கலாம். சிக்கலை புகார் அளிக்க 18001201740 என்ற நம்பருக்கும் நீங்கள் அழைப்பு விடுக்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களின்படி, தவறான UPI பரிவர்த்தனை குறித்து உங்கள் கட்டணச் சேவை வழங்குநருக்குத் தெரிவித்தால், உடனடியாக பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
NPCI-இடம் பூகாரளிக்கலாம்: உங்கள் வங்கி அல்லது UPI சேவை வழங்குநரால் உங்கள் பணத்தை மீட்டெடுக்க முடியாவிட்டால், உங்களுடைய சிக்கல் குறித்து இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்திற்கு (NPCI) தெரிவிக்கலாம்.
https://www.npci.org.in/ என்ற NPCI-இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று, "What We Do" என்ற பகுதிக்குச் செல்லவும். UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வங்கிப் பெயர், UPI ஐடி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி உள்ளிட்ட தவறான கட்டணத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்கவும்.
பணத்தைத் திரும்பப்பெறும் செயல்பாட்டில் நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறாகப் பணம் செலுத்திய மூன்று நாட்களுக்குள் நீங்கள் புகார் அளித்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இருப்பினும், நீங்கள் தாமதமாகி, மூன்று நாட்களுக்குள் சிக்கலைப் புகாரளிக்கத் தவறினால், உங்கள் பணத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமாகிவிடும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications