இந்தியாவில் உள்ள முக்கியமான அரசாங்க ஆவணங்களில் பான் கார்டும் ஒன்று. வருமான வரி செலுத்துவோர் கண்டிப்பாக பான் கார்டு பெற்றிருக்க வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும்போது பான் கார்டு நம்பரை பதிவேற்ற வேண்டியது அவசியமாகும். மேலும் வங்கி கணக்கு திறப்பது முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது வரை, அனைத்திற்கும் பான் கார்டு அவசியமாகிறது. இந்தப் பதிவில் நீங்கள் வெளிநாட்டவராக இருந்து, இந்தியாவில் பான் கார்டு பெற விண்ணப்பிக்க விரும்பினால் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பான் கார்டு என்றால் என்ன?: பான் கார்டு என்பது வருமான வரி துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். KYC சரிபார்ப்பு மற்றும் முகவரி சான்றாக இந்தியாவில் 2 கார்டுகள் தான் செயல்படுகின்றன. அதில் ஒன்று பான் கார்டு மற்றொன்று ஆதார் கார்டு. இரண்டுமே மிகவும் முக்கியமான ஆவணங்கள். எனவே அவற்றை பத்திரமாக வைத்திருப்பது முக்கியம்.

வருமான வரித்துறையால் லேமினேட் செய்யப்பட்ட அட்டைகளாக பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் வெளிநாட்டவராக இருந்து, இந்தியாவில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், NSDL இணையதளத்தில் கீழே உள்ள ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
ஸ்டெப் 1: முதலில் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: உங்கள் தேவைக்கேற்ப விண்ணப்பத்தில் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்கவும். "Application Type" என்பதன் கீழ் "New PAN - Foreign Citizen (Form 49AA)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: அதில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் போன்ற தேவையான அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் நிரப்பவும்.
ஸ்டெப் 4: அதில் பாஸ்போர்ட், முகவரிச் சான்று மற்றும் வருமானச் சான்று போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
ஸ்டெப் 5: உங்களுடைய கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் இந்த விண்ணப்பத்திற்கான கட்டணத்தை ஆன்லைன் செலுத்தவும்.
ஸ்டெப் 6: அதன் பிறகு, 15 இலக்க ஒப்புகை எண் தரப்படும். அதனை நீங்கள் பத்திரமாக சேமித்து வைக்கவும். ஏனென்றால் அது எதிர்கால குறிப்புக்காக தேவைப்படும்.
ஸ்டெப் 7: நீங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டு, அதில் இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படங்களை ஒட்டவும்.
ஸ்டெப் 8: அந்தப் படிவத்தில் கேட்கப்படும் இடங்களில் கையெழுத்திடவும்.
ஸ்டெப் 9: இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் NSDL அலுவலக முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்ப வேண்டும்.
ஸ்டெப் 10: அதில் முக்கியமாக "APPLICATION FOR PAN - FOREIGN CITIZEN" எனக் குறிப்பிட வேண்டும்.
ஸ்டெப் 11: உங்களுடைய பான் கார்டு சில வாரங்களிலேயே நீங்கள் கொடுத்திருந்த முகவரிக்கு வந்து சேரும்.
ஸ்டெப் 12: வெளிநாட்டு குடிமக்கள் இந்தியாவில் பான் கார்டை விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அல்லது சேவை வழங்குநர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் மற்றும் துணை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் துல்லியமாகவும் சீரானதாகவும் இருப்பது முக்கியம். ஏதேனும் முரண்பாடு இருந்தால் விண்ணப்பத்தில் தாமதம் அல்லது நிராகரிப்பு ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications