வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான ஆன்லைன் படிவங்கள் வருமானவரித்துறையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. சம்பளக்காரர்கள் ,மூத்த குடிமக்கள் ,தொழில் புரிபவர்கள் என அனைவருமே தங்களுடைய வருமான வரி கணக்கினை கட்டாயம் தாக்கல் செய்தாக வேண்டும்.
வருமான வரி கணக்கு: வருமானவரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் தங்களுக்காக உகந்த படிவம் எது என்பதை தேர்வு செய்து அதன் அடிப்படையில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த கட்டுரையில் நாம் Freelancerஆக பணிபுரிபவர்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

படிவம் 16: பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஊழியராக சம்பளத்திற்கு வேலை பார்க்கிறோம் என்றால் அந்த நிறுவனமே நமக்கு படிவம் 16 வழங்கும். அந்த படிவம் 16 ஐ கொண்டு நாம் வருமானவரி கணக்கினை எளிதாக தாக்கல் செய்து கொள்ளலாம். ஆனால் Freelancerஆக பணிபுரிபவர்களுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏனெனில் பல்வேறு நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட் அடிப்படையில் இவர்கள் வேலை செய்து கொடுத்திருப்பார்கள். எனவே நிறுவனங்கள் இவர்களுக்கு ப்ராஜெக்ட்டிற்காக வழங்கக்கூடிய சம்பளத்தில் 10% சதவீதம் தொகையை டிடிஎஸ் ஆக பிடித்தம் செய்து இவர்களுடைய பான் நம்பருக்கு எதிராக வருமானவரித்துரையிடம் டெபாசிட் செய்திருக்கும்.
ஐடிஆர் -3ஐ பயன்படுத்த வேண்டும்: Freelancer பணியில் இருப்பவர்கள் வருமான வரி கணக்கு செய்தால் மட்டுமே அந்த டிடிஎஸ் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். எனவே Freelancerஆக பணிபுரிபவர்கள் மிக கவனமாக தங்களுடைய வருமானவரி கணக்கினை தாக்கல் செய்தாக வேண்டி இருக்கிறது. இவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஐடிஆர் -3ஐ பயன்படுத்த வேண்டும்.
அனைத்து ரசீதுகளும் அவசியம்: Presumptive Taxation Scheme முறையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள் ஐடிஆர்-4ஐ பயன்படுத்தி கொள்ளலாம். பழைய வரி நடைமுறையில் கணக்கு தாக்கல் செய்பவராக இருந்தால் வருங்கால வைப்பு நிதி டெபாசிட்டுகள், வரி சேமிப்புக்கான மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை குறிப்பிட்டு வரி விலக்கு பெறலாம். ஆனால் அதற்கான ரசீதுகளை முறையாக சேமித்தாக வேண்டும். புதிய வரி முறையில் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு இது பொருந்தாது.
இன்வாய்ஸ்: அதேபோல தாங்கள் பெற்ற ஊதியங்களுக்கான அனைத்து இன்வாய்ஸ்களையும், ரசீதுகளையும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.அந்த நிதியாண்டில் பெற்ற சம்பளம் அதற்கான இன்வாய்ஸ்களை கணக்கிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சில சமயங்களில் இவர்கள் பிராஜெக்ட் செய்து கொடுத்த நிறுவனங்களே படிவம் 16ஐ வழங்கும். ஆனால் பல நிறுவனங்கள் வழங்கிய படிவம் 16 இருக்கும் என்பதால் அதனை கவனமாக கையாள வேண்டும்.
படிவம் 26 AS- ஐ பயன்படுத்தலாம்: Freelancerஆக வேலை செய்யக் கூடிய நபர்கள் தங்கள் பெயரில் எவ்வளவு டிடிஎஸ் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை படிவம் 26 AS- ஐ பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். வருமான வரித்துறை அலுவலகத்திலேயே இது கிடைத்துவிடும். எந்த நிதியாண்டு என்பதை தேர்வு செய்து இந்த ஆவணத்தை பதிவிறக்கி, எந்தெந்த நிறுவனங்கள் நம் பெயரில் எவ்வளவு தொகையை டிடிஎஸ் டெபாசிட் செய்துள்ளன என தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications