வருமான வரி வரம்புக்கு மேல் ஓராண்டில் சம்பளம் பெற்றால் அதற்கு வரி கட்ட வேண்டும் என்பது வேலை பார்க்கும் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் சில விடுப்புகளை எடுக்காமல் திரும்ப ஒப்படைக்கும் போது அதற்கு வழங்கப்படும் விடுப்புச் சம்பளத்துக்கும் சில நேரங்களில் வரி விதிப்பு இருக்கலாம்.
அதேபோல ஓய்வு பெறும்போது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (10AA) இன் கீழ் லீவு சம்பளத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? எத்தனை முறை வேலைக்கு மாறினாலும், நிலுவையிலுள்ள விடுப்புகளை பணமாக்குவதற்கு முதலாளியிடமிருந்து பெறப்பட்ட பணம் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?

மார்ச் வரை, ஒரு ஊழியரின் பண வரம்பு ₹3 லட்சமாக இருந்தது. எனது தற்போதைய நிறுவனம் லீவுச் சம்பளமாக ₹1.5 லட்சம் அளித்துள்ளது. இதற்கு வரி விதிக்கப்படவில்லை. இப்போது அரசாங்கம் இந்த வரம்பை ₹25 லட்சமாக உயர்த்தியுள்ளதால், வருங்கால முதலாளியுடன் எனது எதிர்கால வேலைக்கான விலக்கு வரம்பு ₹23.5 லட்சமாக இருக்குமா? இப்படியெல்லாம் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கிறதா என்றால் இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பலர் சிறப்பு விடுப்புகளை எடுக்காமல் சேமித்து வைத்து ரிட்டயர்டு ஆகும்போது அதை சரண்டர் செய்வார்கள். அப்படி சரண்டர் செய்யப்படும் நாட்களுக்கு முழுச்சம்பளம், கிராஜுட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும். இந்த விடுப்பு சம்பளத்துக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேலாகப் போனால் வரி விதிக்கப்படும்.
வரிச் சட்டங்களின்படி, ஓய்வுபெறும் போது, பணியமர்த்துபவர்களிடமிருந்து பெறப்பட்ட ஊதியம், குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
விதிவிலக்கின் மதிப்பானது சட்டத்தின் கீழ் , குறிப்பிட்ட வரம்பின் அதிகபட்ச வரம்புடன் கணக்கிடப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விதிகளின்படியும், நீதித்துறை முன்னுதாரணங்களின் அடிப்படையிலும், 'ஓய்வு (ஓய்வூதியம் அல்லது வேறு)' என்ற சொல் ராஜினாமாவை உள்ளடக்கும் அளவுக்கு உள்ளது. இவ்வாறு, வேலையில் இருந்து ராஜினாமா செய்யும் போது முதலாளியிடமிருந்து பெறப்பட்ட விடுப்பு பணத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
இது குறிப்பிட்ட முறை கணக்கீடு மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டது. எப்படியிருந்தாலும், தொடர்ந்து வேலையில் இருக்கும் போது பெறப்படும் எந்தவொரு விடுப்பு பணமும் வரிக்கு உட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளலாம்.
மேலும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களில் விடுப்பு பணப் பட்டுவாடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தால், முன்பு கருதப்பட்ட அத்தகைய விலக்குத் தொகை, எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் விலக்குக்கான மொத்த தகுதி வரம்பிலிருந்து குறைக்கப்படும்.
தற்போதைய சட்டத்தின்படி, ஒரு ஊழியர் தனது வாழ்நாளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முதலாளிகளிடமிருந்து கோரும் ஒட்டுமொத்த விடுப்பு பண விலக்கு, அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த வரம்பை (தற்போது ₹25 லட்சம்) தாண்டக்கூடாது.
நீங்கள் தற்போதைய வேலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் லீவு பணமாக ₹1.5 லட்சத்தைப் பெற்றுள்ளீர்கள் என்றால் இது குறிப்பிட்ட கணக்கீட்டு முறையின்படி விலக்கு பெறுவதற்கு முழுமையாகத் தகுதியானது.
அதாவது, வேறு எந்த வருடத்திலும் நீங்கள் இந்த விலக்கைப் பெறவில்லை என்றால், உங்கள் அடுத்தடுத்த வேலையிலிருந்து ராஜிநாமா செய்யும் போது அதிகபட்சமாக ₹23.5 லட்சம் (தற்போதைய வரம்புகளின்படி) வரை விலக்கு பெறலாம்.
இதற்கு முன்பு ஒருவர் தனது வாழ்நாளில் ரூ.3 லட்சம் வரை விடுப்பு சம்பளத்துக்கு வருமான வரி கட்டத் தேவையில்லை. அந்த வரம்பு இப்போது ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications