சென்னை: இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் ஊழியர்களுக்கு ஓய்வு காலத்திற்கான ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு நிறுவனத்தில் நாம் வேலைக்கு செல்லும்போது நம்முடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நம் சார்பாகவும், நிறுவனம் சார்பாகவும் பிடித்து அதனை நம் பெயரில் ஒரு பிஎஃப் கணக்கினை உண்டாக்கி வரவு வைப்பார்கள். நாம் பணி ஓய்வு பெற்ற பிறகு இந்த பிஎஃப் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் இரண்டு முறையில் நம்முடைய பணமானது பங்களிப்பு செய்யப்படும். நாம் செய்யும் பங்களிப்பு தொகை முழுவதும் பிஎஃப் கணக்கிலும் , நிறுவனம் செய்யும் பங்களிப்பில் ஒரு கணிசமான தொகை ஓய்வூதிய தொகையிலும் சென்று சேரும் . நாம் ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் அந்த தொகை நம்முடைய கணக்குக்கு வந்துவிடும்.

தற்போது இருக்கும் விதிமுறைப்படி ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் தொகையானது ஊழியர் சார்பிலும், மேலும் 12 சதவீதம் தொகையானது நிறுவனம் சார்பிலும் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்யப்படும். இதில் நிறுவனம் வரவு வைக்கும் தொகையில் 8 ,3 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கும், 3.67% இவ்வாறு நம்முடைய பிஎஃப் கணக்கிற்கும் சென்றுவிடும். நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு ஆண்டுதோறும் அரசு 8.25% வட்டி வருமானத்தை வழங்குகிறது.
ஒரு நபர் 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் என வேலையில் இருக்கிறார் எனும் போது அவர் எவ்வளவு தொகையை பிஎஃப் தொகையாக பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம். மணி என்ற ஒரு நபர் மாதம் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி ஆகிய அனைத்தும் சேர்த்து 25 ,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். அவருடைய சம்பளத்தில் அடிப்படை இதில் 12 சதவீதம் அதாவது மாதம் தோறும் 3 ஆயிரம் ரூபாயை என்பது பிஎஃப் கணக்கிற்கு அவர் சார்பில் செல்கிறது . அதேபோல நிறுவனம் சார்பில் இவர் பிஎஃப் கணக்கிற்கு 3.67% தொகை அதாவது 915 ரூபாய் செல்கிறது, மீதமுள்ள பணம் ஓய்வூதிய கணக்கிற்கு சென்றுவிடும்.
இப்படி பார்த்தால் மணியின் பிஎஃப் கணக்கில் மாதந்தோறும் 3915 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இவர் பங்களிப்பு செய்யும் தொகை 47 ,010 ரூபாய். இந்த பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் 8.25% வட்டி வழங்குகிறது .கூட்டுவட்டி முறையில் இவருடைய பணம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அப்படி பார்க்கும்போது 10 ஆண்டுகளில் இவருடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகை 7.45 லட்சம் ரூபாய். அதுவே 15 ஆண்டுகளில் இது 14.08 இலட்சமாக உயர்ந்திருக்கும், 20 ஆண்டுகளில் இவருடைய பிஎஃப் தொகை 23.50 இலட்சமாக அதிகரித்திருக்கும். இதில் அவருடைய சம்பளம் ஆண்டுதோறும் உயர்கிறது என்றால் அதற்கு ஏற்பவும் கணக்கீடு மாறும். தற்போது அரசு நாமே முன்வந்து கூடுதலாக பங்களிப்பு செய்யும் வாய்ப்பையும் வழங்குகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications