சென்னை: ஓய்வூதிய காலத்தை நிம்மதியாக கழிப்பதற்கு பல அரசு திட்டங்கள் உள்ளன. ஆனால், இன்றைய சூழ்நிலையில், ஓய்வூதிய காலத்திற்கு போதுமான பணத்தை சேமிப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. இந்த சவால்களுக்கு மத்தியில், நமக்கு உதவி செய்யும் சிறந்த திட்டங்களில் ஒன்றுதான் EPF. இந்தப் பதிவில் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் EPFO பங்களிப்புகளுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்தியாவில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமாகும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) மூலம் நடத்தப்படும் இந்தத் திட்டம், மாதாந்திர ஓய்வூதியத்தில் ஓய்வு பெறும்போது ஒரு மொத்தத் தொகையை வழங்குகிறது. ஒரு ஊழியர் தனது EPF கணக்கில் அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 12 சதவீதம் வரை பங்களிக்க முடியும். மேலும் அவர் பணிபுரியும் நிறுவனனமும் சமமான தொகையை பணியாளரின் கணக்கில் செலுத்த வேண்டும்.

12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் ஊழியரின் EPF-க்கும், 3.67 சதவீதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்துக்கும் (EPS) செல்கிறது.
EPF வட்டி விகிதம்: 2023-24 நிதியாண்டிற்கான சமீபத்திய வட்டி விகிதம் CBT வாரியத்தால் பிப்ரவரி 2024ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்தது. தற்போதைய வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
EEE வகை: வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கும் சில சேமிப்பு திட்டங்களில் EPF மிக முக்கியமான ஒன்றாகும். இது முதலீடு, வட்டி வருமானம் மற்றும் தொகையைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றிற்கு வரி விலக்கு அளிக்கும் "exempt-exempt-exempt (EEE)" வகையின் கீழ் உள்ள திட்டமாகும்.
ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டாலும், பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
EPF இருப்பு மற்றும் வட்டித் தொகையை எவ்வாறு தெரிந்துகொள்ளலாம்?
உங்கள் EPF இருப்பை ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். உங்கள் மொபைல் ஃபோனில் இருந்து உமாங் ஆப் (Umang App), EPF இணையதளம் அல்லது SMS மூலம் பார்க்கலாம். உமாங் ஆப்-ஐ பயன்படுத்தித் தெரிந்துகொள்ள கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: EPFO அமைப்பின் www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: "E-PassBook" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது உங்கள் UAN, பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா குறியீட்டை என்டர் செய்து உள்ளே நுழையவும்.
ஸ்டெப் 4: உள்நுழைந்த பிறகு, பாஸ்புக்கிற்கான "Member ID" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 5: பாஸ்புக் PDF வடிவில் கிடைக்கும், அதை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
ஸ்டெப் 6: https://passbook.epfindia.gov.in/ என்ற இணையதளத்தில் பாஸ்புக்கை நேரடியாக பதிவிறக்கலாம்.
ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் EPFO பங்களிப்புகளுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?: வட்டி விகிதம் 8.25 சதவீதம் என்பதால், ரூ.5 லட்சம் EPF பங்களிப்புக்கு உங்களுக்கு ரூ. 41,250 வட்டியாகக் கிடைக்கும், மேலும் உங்கள் முதிர்வுத் தொகை ரூ.5,41,250 ரூபாயாக இருக்கும்.
உங்கள் EPF பங்களிப்பு ரூ. 10 லட்சமாக இருந்தால், மொத்த வட்டியாக ரூ. 82,500 மற்றும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.10,82500 ரூபாய் கிடைக்கும்.
உங்கள் EPF பங்களிப்பு ரூ. 15 லட்சமாக இருந்தால், மொத்த வட்டியாக ரூ.1,23,750 மற்றும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.16,23,750 ரூபாயாக இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications