சென்னை: ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலையில் நம்மை சார்ந்தவர்கள் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகாமல் இருக்க லைஃப் இன்சூரன்ஸ் பெறுவது அவசியம். ஆனால், போதுமான தொகைக்கு பாலிசி எடுக்கவில்லை என்றால், இன்சூரன்ஸ் எடுத்தும் அவை பயனளிக்காமல் போகலாம். சரியான தொகையைக் கண்டறிந்து, உங்கள் குடும்பத்தினருக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்ய இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.
லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கும் போது மிக முக்கியமான படி என்ன தெரியுமா? சரியான தொகைக்கு பாலிசி எடுப்பது தான். சிறந்த பாதுகாப்பை தங்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றால் அதற்கு பாலிசி பெறுபவர் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பாலிசி கவரேஜ் என்றால் என்ன?: கவரேஜ் என்பது காப்பீட்டுக் கொள்கையின் படி ஒரு நிறுவனம் வழங்கக்கூடிய அதிகபட்ச நிதிப் பாதுகாப்பைக் குறிக்கிறது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம். மிஸ்டர் X ரூ. 1 கோடி டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை வாங்குகிறார். அவர் தவணை காலத்திற்குள் இறந்தால், காப்பீட்டு நிறுவனம் அவரது நாமினிக்கு ரூ. 1 கோடி செலுத்தும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 1 கோடி என்பது பாலிசி கவரேஜ் ஆகும். இது காப்பீடு செய்யப்பட்ட தொகை என்றும் அழைக்கப்படுகிறது.
எனவே பாலிசி பெறும்போது போதிய கவரேஜைப் பெறாமல் இருப்பது, உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க போதுமானதாக இருக்காது. எனவே காப்பீடு செய்யப்படுவதன் நோக்கத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் சரியான கவரேஜ் தொகையைக் கண்டறிவது மிகவும் அவசியம். இதை எளிய வழியில் கண்டுபிடிக்கலாம்.
ஸ்டெப் 1: உங்கள் மாதாந்திர செலவுகளை முதலில் கணக்கிடுங்கள். மளிகை பொருட்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம், எரிபொருள் செலவுகள், வாடகை போன்றவற்றுக்கு நீங்கள் செலவிடும் பணம் இதில் அடங்கும். இவற்றை தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2: பொறுப்புகளை பகுப்பாய்வு செய்யுங்கள். வீடு, கார் அல்லது தனிநபர் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் பிற நிலுவைத் தொகைகள் போன்ற கடன்கள் இதில் அடங்கும்.
ஸ்டெப் 3: உங்களுடைய பிற செலவுகளையும் கணக்கிட்டு இன்சூரன்ஸ் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி, அவற்றின் மூலம் உங்களுக்கான சரியான கவரேஜ் எது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
மேற்கண்ட அனைத்தையும் வைத்து உங்களுடைய செலவுகளை கணக்கிட்டு, உங்களுக்கு உள்ள நிலுவை கடன்களையும் கணக்கிட்டு அதன்பிறகே, உங்களுக்கு ஏற்ற லைஃப் இன்சூரன்ஸ் கவரேஜைப் பெற வேண்டும்.


Click it and Unblock the Notifications