சென்னை: இந்தியாவில் ஊதியதாரர்களுக்கு ஓய்வு காலத்தில் ஒரு கணிசமான தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதிய தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் epfo திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நாம் மாதந்தோறும் செய்யக்கூடிய பங்களிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையானது ஓய்வூதிய திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனை தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் என அழைக்கிறார்கள். ஒரு நபர் எவ்வளவு தொகையை ஓய்வூதியமாக பெற முடியும் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தில் பணி செய்யக்கூடிய ஊழியர் தன்னுடைய அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் தொகையை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்கிறார். இந்த தொகை நேரடியாக பிஎஃப் கணக்கிற்கு சென்று விடுகிறது. அதே அளவிலான தொகையை அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் அந்த ஊழியரின் பெயரில் வரவு வைக்கும். இதில் 8.3 சதவீத தொகை ஓய்வூதிய திட்டத்திற்காக சென்று விடும். மீதமுள்ள 3.6 சதவீத தொகை பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஒரு நபர் ஓய்வு காலத்தில் மாதந்தோறும் கணிசமான தொகையை ஓய்வூதியமாக பெற வேண்டும் என விரும்பினால் அவர் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும் என்பதே நிபந்தனை. 10 ஆண்டுகளுக்கு மேல் அவர் கணக்கில் வரவு வைக்கப்படும் பணத்தில் மேலே கூறிய விகிதங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தொகை பிஎஃப் கணக்கிலும் குறிப்பிட்டதொகை ஓய்வூதிய திட்டத்திற்கும் பிரித்து வரவு வைக்கப்படுகிறது.
இவ்வாறு ஒரு நபருக்கு எவ்வளவு ஓய்வூதியம் பி எஃப் கணக்கிலிருந்து கிடைக்கும் என்பதை நாம் தற்போது கணக்கிடலாம்.
இபிஎஸ் ஓய்வூதியம் = சராசரி ஊதியம் x ஓய்வுக்கான சேவை காலம் / 70 (EPS Pension = (Average Salary × Pensionable Service) ÷ 70)
சராசரி ஊதியம் என்பது கடந்த 12 மாதங்களில் அவர் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் டிஏ உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது .
ஓய்வுக்கான சேவை காலம் என்பது அதிகபட்சம் 35 ஆண்டுகள் ஆகும்.
எனவே ஒரு நபரின் சம்பளம் அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் என வைத்து கொள்வோம், அவர் வேலை செய்த காலம் 35 ஆண்டுகள் என வைத்து கணக்கிடலாம்.
ஓய்வூதியம் = (15,000 × 35) ÷ 70 = ₹7,500 மாதந்தோறும்.
எனவே இந்த ஃபார்முலாவின் அடிப்படையில் பார்க்கும் போது, அதிகபட்சம் 7,500 ரூபாயை ஓய்வூதியமாக பெற முடியும். ஒரு நபர் தனக்கு 58 வயது ஆன பிறகு இந்த ஓய்வூதிய தொகையை மாதாந்திரமாக பெற்றுக்கொள்ள முடியும்.
Story Written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications