நீங்கள் ஓய்வு பெறும் போது எவ்வளவு நிதி தேவைப்படும்? ஈஸியா கணக்கிடலாம் வாங்க

இளமைக்காலத்தில் ஓடி ஓடி உழைக்கும் நாம் ஓய்வு காலத்தில் சிறந்ததொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் விரும்புவோம். எனவே தான் ஓய்வு காலத்திற்கு என முன்கூட்டியே திட்டமிட்டு பணத்தை முதலீடு செய்து வைக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஓய்வு காலத்தில் நமக்கு வருமானம் இருக்கப் போவதில்லை ,ஆனால் நமது மருத்து செலவுகள் உள்ளிட்டவை அதிகமாக இருக்கும். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட்டு நமது மருத்துவ செலவுகளை மற்றும் நமது வாழ்க்கைமுறை செலவுகளை கணக்கிட்டு பணத்தை சேமித்து வைப்பது சிறந்த முடிவாக இருக்கும்.

நீங்கள் ஓய்வு பெறும் போது எவ்வளவு நிதி தேவைப்படும்? ஈஸியா கணக்கிடலாம் வாங்க

ஓய்வு காலத்திற்கான முதலீட்டை தொடங்கும் முன்பு, தற்போதைய பண வீக்கம் எவ்வளவு, தற்போது கடன்கள் நீங்கலாக உங்களுக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது?, உங்களுடைய லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கிறது? உடல் நிலை நிலவரம் என்ன? ஆகிய அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இந்தியாவில் ஒருவர் தங்களுடைய ஓய்வு காலத்தை சிறந்த முறையில் மாற்றிக்கொள்ள எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை கணக்கிடுவதற்கான கால்குலேட்டரை செபி இணையதளமே வழங்குகிறது. இந்த இணைப்பை (https://investor.sebi.gov.in/calculators/financial_goal_planner.html) கிளிக் செய்தால் நம் ஓய்வு கால செலவுகள் எவ்வளவாக இருக்கும் எவ்வளவு தொகுப்பு நிதி நமக்கு தேவை என்பதை கணக்கிட்டு காட்டி விடும்.

இந்த கால்குலேட்டரில் நம்முடைய தற்போதைய செலவினங்கள் எவ்வளவு நம்முடைய வயது என்ன எந்த வயதில் நாம் ஓய்வு பெற விரும்புகிறோம் தற்போது நம் வசம் இருக்கக்கூடிய முதலீடுகள் என்னென்ன என்பன உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்தால் ஓய்வு காலத்தில் எவ்வளவு செலவாகும் நமக்கு தொகுப்பு நிதியாக எவ்வளவு தேவை என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களை காட்டிவிடும்.

உதாரணமாக தற்போது 30 வயதாகக் கூடிய ஒரு நபர் அவருடைய மாதாந்திர செலவு 30,000 என வைத்துக்கொண்டு செபியின் இந்த கால்குலேட்டரில் உள்ளீடு செய்து கணக்கு செய்தோம்.

இவரது வயது 30, மாதச் செலவு 30,000, ஓய்வு பெறும் வயது 60, பண வீக்க விகிதம் 6%, அவர் 80 வயது வாழ்வார் என வைத்துக் கொள்வோம், ஓய்வு காலத்தில் பிஎஃப், கிராஜூவிட்டி என 15 லட்சம் ரூபாய் கிடைக்கும், இவரிடம் எந்த ஒரு முதலீடும், சேமிப்பும் கைவசம் இல்லை என கொள்வோம்.

இந்த தகவல்களை உள்ளீடு செய்த போது செபி கால்குலேட்டர் கணக்கிட்டு கூறியது, இந்த நபர் 60 வயதாகும் போது மாதாந்திர செலவு 3.44 லட்சம் ரூபாய் என உயர்ந்திருக்கும். எனவே 60 வயதில் இவரிடம் 6.81 கோடி ரூபாய் தொகுப்பு நிதியாக தேவைப்படும் என கூறுகிறது. இந்த தொகை இருந்தால் மட்டுமே தற்போது வாழ்வதை போன்ற ஒரு லைஃப் ஸ்டைலுடன் ஓய்வு காலத்திலும் நிம்மிதியாக வாழ முடியும்.

என்னது இத்தனை கோடி தேவைப்படுகிறதா என நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால் நமது விலைவாசி உயர்வையும் நமது பணவீக்க விகிதத்தையும் கணக்கில் கொண்டு தான் நாம் எதிர்கால பண தேவைக்கான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்திற்கு ஆகக்கூடிய செலவானது தற்போது பல மடங்கு உயர்ந்திருக்கிறது, இன்னும் 30 ஆண்டுகளில் இது மேலும் பல மடங்கு உயரக்கூடும். எனவே இவற்றை கணக்கில் கொண்டு தான் முதலீடு முடிவுகளை எடுக்க வேண்டும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+