இந்தியாவில் முதன் முதலில் ஓலா நிறுவனம் தான் வாடகை வாகன செயலி மூலம் வாடகை ஆட்டோக்கள் மற்றும் கார்கள் சேவையை கொண்டு வந்தது. இதனை அடுத்து ஊபர் நிறுவனம் இந்தியாவில் கால் பதித்தது.
இந்தியாவில் வாடகை ஆட்டோ, வாடகை கார் சேவைகளில் ஓலாவும், ஊபரும் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த காலகட்டம் அது. குறிப்பாக ஓலா நிறுவனம் யூனிகார்ன் நிறுவனம் ஆக வளர்ச்சி அடைந்திருந்தது. இப்படி இந்த துறையில் ஏற்கனவே இரண்டு ஜாம்பவான்கள் இருந்தபோதுதான் ரேபிடோ கால் பதித்தது. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வாடகை வாகன செயலி சேவையில் முன்னணியில் இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ரேபிடோ தங்களுடைய வாடிக்கையாளர்கள் யார் என்பது குறித்த ஒரு தெளிவான பார்வையுடன் தொழிலில் இறங்கியதுதான். ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் ப்ரீமியம் வாடிக்கையாளர்கள் மீது கவனம் செலுத்தி வாடகை வாகன சேவைகளை வழங்கி வந்த நிலையில். 60 ரூபாயிலிருந்து 65 ரூபாய்க்கு வாடகை வாகன சேவையை வழங்க முன் வந்தது ரேபிடோ. அதிக தொகை கொடுத்து காரில் செல்ல முடியாதவர்களுக்காக குறைந்த தொகையில் பைக் டாக்ஸி சேவையை கோண்டு வந்தது.
இந்த பைக் சேவை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்று தந்தது. அதுமட்டுமில்லாமல் ஓலா, ஊபரை போல ஒவ்வொரு பயணத்திற்கும் ஓட்டுநரிடம் இருந்து கமிஷன் பெறாமல் மாத சந்தா முறையை அறிமுகம் செய்தது ரேபிடோ. வாகன உரிமையாளர்கள் மாதம் சந்தா தொகையை செலுத்தினால் போதும். எனவே ரைடில் கிடைக்கும் முழு தொகையும் ஓட்டுநர்களுக்கே செல்கிறது. இந்த மாடல் பிடித்திருப்பதால் பலரும் ஆர்வத்தோடு தங்களை ரேபிடோவில் இணைத்துக் கொண்டு வாடகை வாகன சேவைகளை வழங்குகின்றனர்.
ரேபிடோ ஓட்டுநர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் ஒரு செயலியாக மட்டுமே செயல்படுகிறது. இந்த அணுகுமுறை தான் தற்போது ரேபிடோ வெற்றி பெறுவதற்கு காரணமாக இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 500 ரைட்கள் மட்டுமே பதிவாகின, அது 2024 ஆம் ஆண்டில் 16.5 லட்சம் ரைடுகளாக உயர்ந்துள்ளன. அதாவது 8 ஆண்டுகளில் 3,300 மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
தங்களுடைய வாடிக்கையாளர்கள் யார் என்பதை சரியாக திட்டமிட்டு அவர்களுக்கான சேவையை வழங்கியது இந்த நிறுவனம் வளர்ச்சி அடைவதற்கு காரணமாகிவிட்டது. இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட நாடு பலதரப்பட்ட பொருளாதார சூழல்களில் வாழும் மக்களை கொண்ட நாடு. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் நம்மளுடைய வாடிக்கையாளர்கள் யார் என்பதை புரிந்து அவர்களுக்கான சேவையை வழங்கினால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு ரேபிடோவே உதாரணம். 2015 ஆம் ஆண்டு அரவிந்த் சங்கா, பவன் குண்டு பள்ளி, ரிஷிகேஷ் ஆகிய முன்னாள் ஐடி மாணவர்களால் தொடங்கப்பட்ட ரேபிடோ நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் யூனிகார்ன் நிறுவனமாக மாறி இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications