தற்போது இந்திய குடும்பங்களில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அனைத்து அறைகளிலும் மின்விசிறிகள், வெயில் அதிகமாக இருக்கக்கூடிய வீடுகள் நகரங்களில் வசிக்கும் வீடுகளில் கட்டாயம் ஏசி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பல்வேறு மின்னணு சாதனங்களை நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம்.
இந்தியாவில் எப்பொழுதுமே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை சந்தை என்பது ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி அடைந்து தான் வருகிறது. இவ்வாறு அதிக மின் சாதனங்களை நாம் வீட்டில் பயன்படுத்துவதன் விளைவு நமக்கு கரண்ட் பில் கண்டிப்பாக அதிகமாக தான் வரும் . இந்த நிலையில் தான் ஒரு பர்சனல் பைனான்ஸ் நிதி ஆலோசகர் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு 3 ஆயிரம் ரூபாயாக இருந்த கரண்ட் பில் மாதத்திற்கு 160 ரூபாய் என நான் எப்படி குறைத்தேன் என்பதை விவரமாக தெரிவித்திருக்கிறார்.

தான் செய்த ஒரு முறை முதலீடு தனக்கு மின்சார கட்டணத்தில் பெரிய அளவிலான சேமிப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார். சுஜித் எஸ் எஸ் என்பவர் moneydhan.com என்ற பர்சனல் பைனான்ஸ் தளத்தை நடத்தி வருகிறார். இவர் மாதம் தோறும் மூன்றாயிரம் ரூபாய் மின்சார கட்டணம் தான் செலுத்தி வந்ததாகவும் தற்போது அது வெறும் 120 ரூபாயாக குறைந்துவிட்டது என்றும் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
இதற்கு அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் அவருடைய வீட்டின் மேல் குறையில் 5 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலார் அமைப்பை நிறுவியது தான் . இதற்காக தான் மூன்று லட்சம் ரூபாயை செலவு செய்ததாக தெரிவித்திருக்கும் அவர் அதில் 78 ஆயிரம் ரூபாய் தனக்கு அரசின் மானிய தொகையாகவே வந்துவிட்டது என கூறியிருக்கிறார். என் கையில் இருந்து நான் போட்டது 2.2 லட்சம் ரூபாய் தான் . ஆனால் நான் செய்த ஒரு முறை முதலீடு ஓராண்டிலேயே தனக்கு 36 ஆயிரம் ரூபாயை சேமித்து தந்திருப்பதாக கூறுகிறார் .

அதாவது மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கரண்ட் பில் செலுத்தி வந்த தான் தற்போது 120 ரூபாய்க்கு மேல் செலுத்துவதில்லை என கூறியிருக்கிறார். இன்னும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும்போது தான் கரண்ட் பில் செலுத்த வேண்டிய தேவையை இருக்காது எனக் கூறியிருக்கும் அவர் நாள்தோறும் சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி நாம் இலவசமாக வீட்டில் இருக்கும் அனைத்து மின்சாதனங்களையும் பயன்படுத்தலாம் என கூறுகிறார்.
வீட்டில் இன்டக்சன் ஸ்டவ் , எலக்ட்ரிக் கீசர், வாஷிங் மெஷின், வாட்டர் பம்ப் என அனைத்து மின் சாதனங்களுக்குமான மின்சாரமும் இந்த சோலார் பவரில் இருந்தே தனக்கு கிடைத்து விடுகிறது என கூறுகிறார். மின்சார கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் இந்த சூரிய ஒளிச் சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்திலேயே சார்ஜ் செய்வதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.
மக்கள் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசு கூட கடந்த ஆண்டு பிரதம மந்திரி சூரிய கர் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. பிரதம மந்திரி சூரிய ஒளி மின்சார திட்டம் என அழைக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தி பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது.
இதில் சேர்பவர்களுக்கு ஆண்டுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம், இது தவிர இந்த சோலார் பேனல்கள் அமைப்பதற்கான மானியமும் வழங்குகிறது. இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இதற்காக https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்யலாம். 2 கிலோவாட் வரை திறன் கொண்ட சோலார் அமைப்புகளுக்கு 30,000 ரூபாயும், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட சோலார் அமைப்புகளுக்கு 78,000 ரூபாயும் மானியமாக கிடைக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications