நடப்பு நிதியாண்டின் இறுதி நாளை எட்டியுள்ள நிலையில், பலரும் வருமான வரி தாக்கல் செய்வதில் மும்முரமாக இருந்து வருகின்றனர். பலரும் முகவர்கள் மூலமாக வருமான வரி தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தாலும், சிலர் தாங்களாகவே பண்ண நினைக்கின்றனர்.
எஸ்பிஐ அப்படி தாங்களாகவே வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு உதவி வருகின்றது.
எஸ்பிஐ தனது யோனோ ஆப் மூலம் இலவசமாக உங்கள் வருமான வரியை இலவசமாக தாக்கல் செய்ய உதவுகிறது எனலாம்.
என்னென்ன ஆவணம்?
பான் கார்டு
ஆதார் கார்டு
பார்ம் 16
வரி கழித்தல் தகவல்
வட்டி வருமான சான்றிதழ்
வரி சேமிப்பு சேமிப்பு ஆவணங்கள்
எப்படி செய்வது?
வாடிக்கையாளர்கள் இலவசமாக வருமான வரி தாக்கல் செய்து கொள்ளலாம் என்றாலும், அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதற்காக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ-யின் யோனோ ஆப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை லாக் இன் செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக Shop and Order என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
அதில் வரி மற்றும் முதலீட்டை தேர்வு செய்யவும்
அதன் பிறகு Tax2win என்பதை தேர்வு செய்யவும்
பயனாளார்கள் மேற்கண்ட படி நடைமுறைகளை சரியாக கடைபிடித்து வருமான வரி தாக்கலை செய்து கொள்ளலாம்.
சந்தேகம் இருக்கா?
வருமான வரி தாக்கல் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருக்கும்பட்சத்தில், நீங்கள் 9660996655 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் சந்தேகத்தினை தீர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லை எனில் support@tax2win.in என்ற மெயில் ஐடிக்கும் உங்கள் சந்தேகத்தினை அனுப்பலாம்.
புதிய வருமான வரி முறை
ஏப்ரல் 1, 2023 முதல் புதிய வருமான வரி முறையானது அமலுக்கு வரவுள்ளது. இது தவிர பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகின. குறிப்பாக 7 லட்சம் ரூபாய்க்கு வரைக்கும் வரி கிடையாது என்ற நிலையில், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை. ஆக வருமான வரி தாக்கல் செய்யும்போது இதனையும் கவனத்தில் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications