IRCTC-யின் புது ஆப் SwaRail.. டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை இந்த ஒரு செயலி இருந்தா போதும்!

ஐஆர்சிடிசி பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில் சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் SwaRail என்ற ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. டிக்கெட் முன்பதிவு செய்வது மட்டும் இல்லாமல் இந்த செயலி வாயிலாக நாம் ரியல் டைம் ட்ராக்கிங், பிஎன்ஆர் செக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். குறைந்த கட்டணம் நிம்மதியான பயணம் என நீண்ட தூர பயணங்களுக்கு ரயில்கள் தான் சிறந்தவை. தற்போது நாம் ரயில் டிக்கெட்களை ஐஆர்சிடிசி செயலி மற்றும் பிற மூன்றாம் தரப்பு செயலிகள் வாயிலாக பதிவு செய்கிறோம். இந்நிலையில் தான் ஐஆர்சிடிசி SwaRail என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

IRCTC-யின் புது ஆப் SwaRail.. டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை இந்த ஒரு செயலி இருந்தா போதும்!

ஆண்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் கருவிகளில் பதிவிறக்கம் செய்து இதனை பயன்படுத்த முடியும். இந்தியாவின் Center For Railway System என்ற அமைப்பு இந்த செயலியை உருவாக்கி இருக்கிறது. இதனை பயன்படுத்தி எப்படி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்ற விவரங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

1. முதலில் SwaRail செயலியை நாம் டவுன்லோட் செய்ய வேண்டும். ஏற்கனவே ஐஆர்சிடிசிக்கு நாம் வைத்திருக்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கொண்டே இதில் கணக்கு தொடங்கலாம். ஒருவேளை உங்களிடம் ஐஆர்சிடிசி கணக்கு இல்லை என்றால் புதிதாக SwaRail செயலியிலேயே கணக்கு தொடங்கலாம்.

2. இந்த செயலியில் லாகின் செய்த பிறகு, 'Journey Planner' என்ற பிரிவில் 'Reserved', 'Unreserved' மற்றும் 'Platform' ஆகிய மூன்றுக்குமான டிக்கெட் முன்பதிவு காட்டும் இதில் தேவையானவற்றை கிளிக் செய்ய வேண்டும். நாம் 'Reserved' என்பதை கிளிக் செய்கிறோம்.

3. அதில் நீங்கள் புறப்படும் ரயில் நிலையம், செல்ல வேண்டிய ரயில் நிலையம் ஆகியவற்றின் பெயர்களை உள்ளிட வேண்டும், பயண தேதி, எந்த வகையான இருக்கை ஆகியவற்றை தேர்வு செய்து 'Search' கொடுக்க வேண்டும். அதில் நீங்கள் தேர்வு செய்த தேதியில் அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களின் பட்டியல் காட்டும். அதில் விருப்பமானதை தேர்வு செய்ய வேண்டும்.

4. பின்னர் பயணியின் தகவல்களை உள்ளிட வேண்டும். 'Review Journey Details' என்பதை கிளிக் செய்து அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

5. இதனை அடுத்து டிக்கெட் கட்டணத்தை செலுத்தும் பக்கம் வரும், அதில் 'Book Now' கொடுத்துவிட்டு, உங்களின் R-Wallet அல்லது UPI அல்லது credit/ debit கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் வாயிலாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்

6. பின்னர் "My Bookings" என்பதை கிளிக் செய்தால் நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட் காண்பிக்கப்படும். இதனை நீங்கள் பிடிஎஃப் முறையில் பகிரவும் முடியும்.

ஐஆர்சிடிசி Vs SwaRail என்ன வித்தியாசம்?

ஐஆர்சிடிசி செயலியை நாம் ரிசர்வ்டு டிக்கெட் முன்பதிவு செய்வது, பிஎன்ஆர் நிலையை காண்பது போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் SwaRail செயலியில் ரிசர்வ்டு, அன்ரிசர்வ்டு, பிளாட்பார்ம் ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

ஐஆர்சிடிசி செயலியில் எந்த ஒரு ரயில் சேவையை பெறுவதற்கும் நாம் தனித்தனியே லாகின் செய்ய வேண்டும் ஆனால் SwaRail செயலியில் ஒரு முறை லாகின் செய்தாலே போதும் அனைத்து சேவைகளும் கிடைத்துவிடும்.

ஐஆர்சிடிசியில் நாம் டிக்கெட் முன்பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஆனால் SwaRail செயலியில் நாம் உணவு ஆர்டர் செய்யலாம், சரக்குகளை கொண்டு செல்ல முன்பதிவு செய்வது, பார்சல் சேவைகளுக்கு முன்பதிவு மற்றும் டிராக்கிங் செய்வது, புகார்களை வழங்குவதற்கான Rail Madad சேவைகள் ஆகிய அனைத்தையும் பெற முடியும். எனவே ஐஆர்சிடிசியுடன் ஒப்பிடும் போது இது அனைத்து சேவைகளும் ஒருங்கிணைந்ததாக இருக்கிறது.

IRCTC-யின் புது ஆப் SwaRail.. டிக்கெட் புக்கிங் முதல் உணவு ஆர்டர் வரை இந்த ஒரு செயலி இருந்தா போதும்!

இந்த SwaRail செயலியின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஆர் வாலெட்: டிஜிட்டல் வாலெட்டாக ஆர் வாலெட் என்ற வசதி இதில் இருக்கிறது. இதில் பணத்தை போட்டு வைத்து அந்த வாலெட்டை கொண்டு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவது: நாம் திடீரென டிக்கெட்டை ரத்து செய்கிறோம் எனும் போது அந்த டிக்கெட் ரத்தாகி அந்த பணமானது மீண்டும் நம்முடைய கணக்கிற்கு வருவதற்கான அனைத்து நடைமுறைகளும் இந்த செயலி வாயிலாக நாம் மேற்கொள்ளவும் முடியும் கண்காணிக்கவும் முடியும் .

புகார்கள்: ரயில் சேவைகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்து புகார் வழங்குவது அந்த புகாரை கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்தையும் வழங்கக்கூடிய Rail Madad சேவையை நாம் இந்த செயலி வாயிலாக பெற முடியும். எனவே இதற்காக தனியாக ஒரு செயலிக்கோ இணையதளத்திற்கோ செல்ல வேண்டிய தேவை இல்லை.

உணவு ஆர்டர் செய்வது: ஐஆர்சிடிசி செயலியில் இல்லாத ஒரு அம்சம் இதில் முக்கியமாக இணைக்கப்பட்டுள்ளது. அது தான் உணவு ஆர்டர் செய்யும் வசதி. நாம் இந்த செயலி வாயிலாக எளிதாக ரயில் பயணத்தின் போது நமக்கு பிடித்த உணவினை ஆர்டர் செய்து கொள்ள முடியும். அது நம்முடைய இருக்கையை தேடி வரும். உணவு ஆர்டர் செய்வதற்காக தனி செயலிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை.

ரயில் பெட்டி இருக்கும் இடம்: இந்த செயலி வாயிலாக நாம் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பே நாம் ஏற வேண்டிய ரயில் பெட்டி பிளாட்பார்மில் எந்த இடத்தில் நிற்கிறது என்பதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும். எனவே நாம் ரயில் நிலையத்திற்கு சென்று எங்கே ரயில் பெட்டி இருக்கிறது என்று தேடி அலைய வேண்டிய அவசியம் கிடையாது.

ரியல் டைம் டிராக்கிங்: நம்முடைய ரயில் தற்போது எந்த இடத்தில் இருக்கிறது தாமதமாகிறதா அல்லது முன்கூட்டியே வருகிறதா என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நிகழ் நேரத்தில் வழங்குகிறது.

இந்த செயலி ஐஆர்சிடிசி செயலியுடன் ஒப்பிடும்போது பல்வேறு வகைகளிலும் மேம்படுத்தப்பட்டு அனைத்து சேவைகளும் ஒரே கிளிக்கில் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FAQs
ஐஆர்சிடிசிக்கும் SwaRail செயலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஐஆர்சிடிசியில் ரிசர்வ்டு டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும் SwaRail செயலியில் அன்ரிசர்வ்டு மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டும் புக் செய்யலாம்.

SwaRail செயலியின் சிறப்புகள் என்ன?

டிக்கெட் முன்பதிவு மட்டுமில்லாமல் பிளாட்பார்ம் டிக்கெட் புக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது , புகார்களை வழங்குவது ஆகிய அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.

ஐஆர்சிடிசியின் புதிய செயலியின் பெயர் என்ன?

ஐஆர்சிடிசி SwaRail என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+