அசாம்: இயற்கை முறையில் வெற்றிலை விவசாயம் செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி மூன்று லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த 45 வயதானவர் ஜதின் சோனோவால்.
தனக்கு சொந்தமான 26,000 சதர அடி நிலத்தில் இயற்கையான முறையில் வெற்றிலை விவசாயம் செய்து ஆண்டுதோறும் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார். வெற்றிலை விவசாயம் மட்டுமல்லாமல் நெல் உள்ளிட்ட பயிர்களையும் அவர் வேளாண்மை செய்கிறார். இவர் தன்னுடைய நிலத்தில் பாரம்பரிய முறையை பின்பற்றி வெற்றிலை விவசாயம் செய்து வருகிறார்.

இவர் வெற்றிலை கொடி படர பொருத்தமான மூங்கில் கம்பங்களை தேர்வு செய்து பயன்படுத்துவதாக கூறுகிறார். வழுக்கும் தன்மை கொண்ட மூங்கில் கம்பங்களை வெற்றிலை கொடி பரவுவதற்கு பயன்படுத்த முடியாது என அறிவுரை கூறும் அவர் நன்கு காய்ந்த மூங்கில் கம்பங்களை பயன்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் கொடி மிகச்சிறந்த முறையில் படர்ந்து வெற்றிலையை தரும் என கூறுகிறார். மேலும் மண்ணின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரையும் இவர் வழங்குகிறார்.
எப்பொழுதும் நிலத்தில் தண்ணீர் தேங்கிய வண்ணம் இருக்கக் கூடாது என்றும் அவ்வாறு இருக்கும் போது அது கொடிகளின் இறப்புக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறார். அருகருகிலேயே இந்த மூங்கில் கம்பங்களை நிறுவக்கூடாது அதிக விளைச்சல் வேண்டும் என்பதற்காக பலரும் இந்த தவறை செய்கின்றனர் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
மூங்கில் கம்பங்களுக்கு இடையே மூன்று அடி இடைவெளியாவது இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான வெற்றிலைகளை நாம் அறுவடை செய்ய முடியும் என கூறுகிறார். விவசாயம் என வரும்போது அதிகப்படியான விளைச்சலுக்கு பதிலாக கொஞ்சம் விளைச்சல் இருந்தாலும் அது தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் தான் நம் கவனம் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். மாட்டுச் சாணம் மற்றும் இயற்கை கழிவுகளைக் கொண்டு உரங்களை தயாரித்து பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார். பூச்சி தாக்குதலில் இருந்து தவிர்க்க ரசாயன பூச்சிக்கொல்லிகளை தாங்கள் பயன்படுத்துவதில்லை என கூறும் அவர் எலுமிச்சை பழத்தில் தண்ணீர் தயாரித்து தெளிப்பது என பாரம்பரிய நடைமுறைகளை மட்டுமே பயன்படுத்தி எந்தவித பூச்சி தாக்குதலும் இல்லாமல் வெற்றிலை விவசாயம் செய்வதாக அவர் கூறுகிறார் .
தன்னுடைய நிலத்தில் இருந்து ஆண்டுதோறும் வெற்றிலை விவசாயம் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதாக இவர் கூறுகிறார். 20 வெற்றிலைகள் கொண்ட ஒரு கட்டினை 25 - 30 ரூபாய் வரை விற்பனை செய்வதாக அவர் கூறுகிறார். பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டம் தான் அசாமில் வெற்றிலை விவசாயத்திற்கு உகந்தது என அவர் கூறுகிறார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications