ஆதார் கார்டுடன், பான் கார்டும் நம் நாட்டில் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. நிதி பரிவர்த்தனைகள், ITR தாக்கல் செய்வது மற்றும் அடையாளச் சான்றாக செயல்படுவது என அனைத்திலும் பான் கார்டின் அவசியம் இருக்கிறது. இ-பான் கார்டு எனப்படும் டிஜிட்டல் பான் கார்டு பதிப்பு சில நேரங்களில் உங்களுக்கு தேவைப்படலாம். இந்த இ-பான் கார்டை திறந்து பார்ப்பதற்கு பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது. அந்த பாஸ்வேர்டை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விபரங்களை இந்த பதிவில் பார்ப்போம்
இ-பான் கார்டு பாஸ்வேர்டு என்றால் என்ன?: இ-பான் கார்டு என்பது எப்படி உங்கள் பான் கார்டு செல்லுபடி ஆகிறதோ, அதேபோல செல்லுபடியாகும் டிஜிட்டல் பதிப்பாகும். பான் கார்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இ-பான் கார்டு PDF பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

இந்த இ-பான் கார்டின் PDF பாஸ்வோர்ட் என்பது உங்கள் பிறந்த தேதி. அதாவது "DDMMYYYY" என்ற ஃபார்மேட். எனவே இ-பான் கார்டை டவுன்லோட் செய்து முடித்தவுடன் இந்த பாஸ்வேர்டை கொடுத்து நீங்கள் ஓபன் செய்தால் PDF ஓபன் ஆகிவிடும். நிறுவனங்கள், கூட்டாண்மைகள் மற்றும் LLPகள் போன்ற நிறுவனங்களுக்கு, பாஸ்வோர்ட் என்பது அதே "DDMMYYYY" என்ற ஃபார்மேட்-இல் நிறுவனம் உருவாக்கப்பட்ட தேதியாகும்.
உதாரணத்திற்கு, உங்கள் பிறந்த தேதி ஜூலை 7, 1998 எனில், உங்கள் பாஸ்வோர்ட் 07071998 ஆக இருக்கும். உங்கள் நிறுவனம் பிப்ரவரி 16, 2001 அன்று தொடங்கப்பட்டிருந்தால், பாஸ்வோர்ட் 16022001 ஆக இருக்கும்.
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டைப் பயன்படுத்தி தற்போது பல்வேறு மோசடி சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு இந்த பாஸ்வோர்ட் அம்சம் அமைக்கப்பட்டுள்ளது.
இ-பான் கார்டு பயன்படுத்துவதன் முக்கிய நன்மைகள்: முதலாவதாக பாதுகாப்பு அம்சம் சைபர் கிரிமினல்களுக்கு எதிராக பாதுகாப்பைக் கருதி இ-பான் கார்டுகளுக்கு பாஸ்வேர்டு அமைக்கப்பட்டுள்ளது. பான் கார்டை கையில் எடுத்துச் செல்லும்போது, அது தொலைந்து விடுவதற்கான அபாயம் உள்ளது.
இதனால் பலர் அதை தவறாக பயன்படுத்தவும் கூடும் என்பதால் இ-பான் கார்டு வசதியான ஒன்றாகவும் இருக்கும். அது மட்டுமின்றி எங்கு இருந்து வேண்டுமானாலும் ஆன்லைனில் நீங்கள் இ-பான் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இ-பான் கார்டை உடனடியாகப் பெறுவது எப்படி?
ஸ்டெப் 1: நீங்கள் வருமான வரித் துறையின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரபூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: இதற்குப் பிறகு, இ-ஃபைலிங் போர்டல் ஹோம் பேஜில் கிளிக் செய்து, "Instant e-PAN" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: பிறகு "e-PAN" பக்கத்தில், "Get New e-PAN" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: தற்போது உங்களின் 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்து, "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: பின்னர் OTP சரிபார்ப்பு பக்கத்தில், "நான் ஒப்புதல் விதிமுறைகளைப் படித்துவிட்டேன், மேலும் தொடர ஒப்புக்கொள்கிறேன்" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின் "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP-ஐ என்டர் செய்யவும்.
ஸ்டெப் 7: UIDAI உடன் ஆதார் விவரங்களை சரிபார்க்க தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 8: சமர்ப்பித்த பிறகு, ஒப்புகை எண்ணுடன், செய்தி திரையில் காட்டப்படும்.
ஸ்டெப் 9: தற்போது "Download E-PAN" என்பதைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
மேற்கண்ட ஸ்டெப்ஸ்களை பயன்படுத்தி நீங்கள் எளிதில் இன்ஸ்டன்ட் பான் கார்டு பெற முடியும். மேலும், அதனை PDF வடிவில் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications