வருமான வரித் துறை வரி செலுத்துபவரின் ITR-ஐ ப்ராசஸ் செய்த உடன், அவர்களைத் தொடர்பு கொள்வார்கள் அல்லது பிரிவு 143(1)-இன் கீழ் அறிவிப்பை அவர்களுக்கு தெரிவிப்பார்கள். இந்த அறிவிப்பு ஒரு வரி செலுத்துபவர் தாக்கல் செய்த வரி மற்றும் வரித் துறையால் செய்யப்பட்ட வரி கணக்கீடு ஒத்துப்போகிறதா என்பதைக் குறிக்கிறது. பிரிவு 143 (1) கீழ் அறிவிப்புகள் வரித் துறையால் வரி செலுத்துபவரின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்டல் மூலம் அனுப்பப்படுகின்றன.
ஒரு வரி செலுத்துவோர் பிரிவு 143 (1)-இன் கீழ் அறிவிப்புகளை எப்போது பெறலாம்?: பிரிவு 143 (1) இன் கீழ், பின்வரும் சூழ்நிலைகளில் வருமான வரித்துறையிடமிருந்து அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன.

1. வரித் துறை, வரி செலுத்துபவரின் வருமானம் அல்லது தாக்கல் செய்யப்பட்ட தகவல்களில் ஏதேனும் தவறுகள் அல்லது முரண்பாடுகளைக் கண்டறிந்தால், வரித் தாக்கலில் சில சரிபாடுகளைச் செய்யலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் அறிவிப்புகள் அனுப்பப்படும்.
2. வரி செலுத்துபவர் அதிக வரி அல்லது வட்டி செலுத்த வேண்டியிருந்தால் அறிவிப்புகள் அனுப்பப்படும்.
3. வரி செலுத்துபவரின் ரீபண்ட் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து ரீபண்ட் இல்லை என்றாலும் அறிவிப்புகள் அனுப்பப்படும்.
கூடுதலாக, அறிவிப்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வழங்கப்பட்டதைக் குறிக்கும் SMS-ஐ வரி செலுத்துபவர்கள் பெறலாம்.
பெறப்பட்ட அறிவிப்பை எப்படி திறந்து படிப்பது?: பிரிவு 143(1)-இன் கீழ் வருமான வரித்துறையின் அறிவிப்பைப் பெற்ற பிறகு உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்யலாம். உங்கள் வரி அறிவிப்பை டவுன்லோட் செய்ய, நீங்கள் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று "income tax intimation 143(1) download" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
பிரிவு 143 (1) அறிவிப்புகளைத் திறப்பதற்கான பாஸ்வேர்டு என்ன?: ஹெச்டிஎஃப்சி லைஃப் இணையதளத்தின்படி, பிரிவு 143(1) இன் கீழ் பெறப்படும் அறிவிப்புகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இந்த பாஸ்வேர்டு வரி செலுத்துபவரின் PAN மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
உதாரணமாக, உங்கள் பான் கார்டு நம்பர் "ABCDE1234F" என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பிறந்த தேதி 10 நவம்பர் 1995 என்றால், அறிவிப்பை திறந்து பார்ப்பதற்கான பாஸ்வேர்டு "abcde1234f10111995". ஆனால் பான் கார்டு நம்பரை சிறிய எழுத்துகளில் பயன்படுத்த வேண்டும்.
பிரிவு 143 (1)-இன் கீழ் வருமான வரி அறிவிப்பு வந்தால் எவ்வாறு பதிலளிப்பது?: பிரிவு 143(1)-இன் கீழ் வருமான வரி அறிவிப்பு வந்தால் பதிலளிக்க, கீழ்க்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: செய்யப்பட்ட மாற்றங்களின் தன்மை மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2: தகுந்த விளக்கங்கள், ஆவணங்கள் அல்லது திருத்தங்களை வழங்கும் பதிலைத் தயாரிக்கவும்.
ஸ்டெப் 3: வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்டல் மூலமாகவோ அல்லது நியமிக்கப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்றோ உங்கள் பதிலை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்கவும்.
ஸ்டெப் 4: உங்கள் பதிலின் ஜெராக்சை எதிர்கால குறிப்புக்காக சமர்ப்பித்ததற்கான ஆதாரமாக பராமரிக்கவும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications