இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களுக்கான நிதியை உருவாக்க உதவி செய்யும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு செயல்பட்டு வருகிறது. EPFO அமைப்பால் வழங்கப்படும் திட்டமான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் லட்சக்கணக்கான பயனர்கள் இணைந்துள்ளனர். பணி புரியும் போதே தங்களுக்கு தேவைப்படும் நிதியை சேமித்து வைத்துக்கொள்ள நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து இதில் பங்களிப்புச் செய்ய வேண்டும். அப்படி செய்யப்படும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும். காலப்போக்கில் இதன் மூலம் உங்களுடைய வருமானம் கணிசமாக உயரும்.
2024-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதிக்குள் சமீபத்தில் இபிஎப்ஓ அமைப்பில் இணைந்தவர்கள் நடப்பு நிதியாண்டிற்க்கு UAN நம்பரை ஆக்டிவேட் செய்ய வேண்டும். EPFO அமைப்பில் இணையும் நபர்களுக்கு பிரத்தியேக UAN நம்பர் வழங்கப்படும். இந்த யுஏஎன் நம்பரை புதிதாக இணைந்தவர்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். அப்போதுதான் PF கணக்கை நிர்வகிக்க முடியும். தற்போது இந்த ஆக்டிவேஷன் செயல்முறையை ஆதார் அடிப்படையிலான OTP சரி பார்க்கும் முறையில் செய்யலாம். இந்த செயல்முறையை ஆன்லைனில் முடிப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

UAN-ஐ ஏன் ஆக்டிவேட் செய்ய வேண்டும்?: UAN நம்பரை ஆக்டிவேட் செய்வது ஊழியர்களுக்கு EPFO-வின் ஆன்லைன் சேவைகளை தடையின்றி பெற உதவுகிறது. பிராவிடன்ட் ஃபண்ட் கணக்குகளை நிர்வகித்தால், பிஎப் பாஸ்புக்கை டவுன்லோட் செய்தல், பணம் திரும்ப பெறுதல், முன் பணம் செலுத்துதல், நிறுவனங்களை விட்டு இன்னொரு நிறுவனத்திற்கு மாறுதல், உரிமைக் கோரல்களை சமர்ப்பித்தல், தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்தல் என நிகழ்நேர கோரிக்கைகளை கண்காணிக்க கண்டிப்பாக UAN நம்பரை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
ஆதாரைப் பயன்படுத்தி UAN-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது?:
ஸ்டெப் 1: முதலில் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "இம்பார்ட்டெண்ட் லிங்ஸ்" என்ற செக்சனுக்கு கீழ் "ஆக்டிவேட் UAN" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய UAN நம்பர், ஆதார் நம்பர், பெயர், பிறந்த தேதி, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் ஆகியவற்றை வழங்கவும். உங்களுடைய மொபைல் நம்பரை வழங்கி OTP பெறவும்.
ஸ்டெப் 4: அதன் பிறகு "கெட் ஆதரிசேஷன் பின்" என்பதை கிளிக் செய்யவும். உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். OTP-ஐ வழங்கி செயல்முறையை முடிக்கவும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications