தமிழ்நாட்டில் பல்வேறு அரசு நலத் திட்டங்களை பெறுவதற்கும் மிக முக்கியமான ஒரு ஆவணமாக ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன . மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தொடங்கி பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிப்படையாக ரேஷன் கார்டை தான் பயன்படுத்துகிறார்கள்.
ரேஷன் கார்டினை பொருத்தவரை தற்போது பெரும்பாலான சேவைகளை நம்மால் ஆன்லைன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடிகிறது. உதாரணமாக புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம் செய்வது , புது ரேஷன் அட்டைக்கான விண்ணப்பத்தின் நிலை அறிவது, ரேஷன் அட்டையில் புதிதாக ஒரு உறுப்பினரை சேர்ப்பது , ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது , குடும்பத் தலைவர் மாற்றம் செய்வது, குடும்ப உறுப்பினரின் பெயரை நீக்குவது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் நாம் நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய செல்போன் அல்லது கம்ப்யூட்டர் வாயிலாகவே மேற்கொண்டு விட முடிகிறது.

தமிழ்நாட்டில் 39 மாவட்டங்களில் 34 ,808 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மொத்தம் 2.27 கோடி ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன இதன் மூலம் சுமார் 7 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கார்டில் மிக எளிதாக புதிதாக ஒரு உறுப்பினரின் பெயரை நம்மால் சேர்த்து விட முடியும். அது எப்படி என்பதை இதில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முதலில் தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள். அதில் உறுப்பினரை சேர்க்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து ரேஷன் அட்டையோடு இணைக்கப்பட்டுள்ள 10 இலக்க கைபேசி எண்ணை அதில் உள்ளிட வேண்டும் . இதனை உள்ளீடு செய்தவுடன் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அதனை பதிவு செய்ய வேண்டும்.

இதனை அடுத்து குடும்ப உறுப்பினரை சேர்ப்பதற்காக பக்கம் தோன்றும், அதில் குறிப்பிட்ட அந்த குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டும். அதேபோல பிறந்த தேதி ,குடும்ப தலைவரோடு அவருக்கு என்ன உறவு , பாலினம் , எந்த ஆவணத்தை அடையாள ஆவணமாக பதிவேற்றம் செய்யப் போகிறீர்கள் என்பன உள்ளிட்ட விவரங்களை அதில் உள்ளிட வேண்டும்.
இதனை அடுத்து உங்களுடைய பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு ஒரு குறுந்தகவல். வரும் அதில் நீங்கள் என்ன விண்ணப்பத்தை அனுப்பினீர்கள், அதை அந்த விண்ணப்பத்திற்கான ரெஃபரன்ஸ் நம்பர் உள்ளிடவை இடம் பெற்றிருக்கும். அந்த மெசேஜை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னால் உங்களின் இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா குறிப்பிட்ட அந்த நபரின் பெயர் சேர்க்கப்பட்டதா இல்லையா என்பதை நாம் ஆன்லைனில் சரி பார்த்துக்கொள்ள இந்த எண் என்பது மிகவும் கட்டாயம்.
குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்குள்ளாகவே அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்த்து உறுப்பினரின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்த்து விடுவார்கள் . இவ்வாறு கூடுதலாக ஒரு உறுப்பினர் சேரும்போது உங்களுக்கு ரேஷன் கடையில் அரிசி சர்க்கரை உள்ளிடவை கூடுதலாக கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications