உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பே ஆப்பைத் திறந்து, உங்கள் ப்ரொபைல் கணக்குக்குள் உள்நுழையுங்கள். திரையில் கீழ்ப்பகுதியில் உள்ள கட்டண முறைகள் (Payment methods) விருப்பத்தைத் தட்டவும். அடுத்த பக்கத்தில், கட்டண முறைகளைச் சேர்க்கவும் (Add payment methods) விருப்பத்தைத் தட்டவும்.
இந்த பட்டியலில் இருந்து கிரெடிட் கார்டைச் சேர்க்கவும் (Add credit card) விருப்பத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் ரூபே கிரெடிட் கார்டு எண், காலாவதி தேதி, CVV எண் ஆகியவற்றை உள்ளிட்டு சேமி என்பதை (Save) தட்டவும். உங்கள் கார்டு சேர்க்கப்பட்டதாக கூகுள் பே உங்களுக்குத் தெரிவிக்கும்.

யுபிஐ பரிவர்த்தனைகளில் ரூபே கிரெடிட் கார்டு மூலம் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் தற்போது கிடைக்கிறது. குறிப்பாக மத்திய அரசு யூபிஐ செயலி வாயிலாக ரூபே கிரெடிட் கார்ட்-ஐ பயன்படுத்த அனுமதி கொடுத்த பின்பு அதிப்படியான தள்ளுபடிகள் கிடைக்க துவங்கியுள்ளது.
நேரடி தள்ளுபடிகள்: பல வணிகர்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனை செய்தால் நேரடி தள்ளுபடிகளை வழங்குகின்றன. இந்த தள்ளுபடிகள் பொதுவாக 5% முதல் 15% வரை இருக்கும்.
பணத்தைத் திருப்பிப் பெறுதல்: பல வங்கிகள் ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் குறிப்பிட்ட சதவீதத்தில் பணத்தைத் திருப்பித் தருகின்றன. இந்த திட்டங்கள் பெரும்பாலும் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
பரிசுச் சலுகைகள் மற்றும் ரிவார்ட் புள்ளிகள்: பல வங்கிகள் ரூபே கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் பரிசுச் சலுகைகள் மற்றும் ரிவார்ட் புள்ளிகளை வழங்குகின்றன. இந்த புள்ளிகளை மற்ற சலுகைகளுக்கோ அல்லது பணமாக மீட்டெடுக்கவோ பயன்படுத்தலாம்.
இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மாறிக்கொண்டே இருக்கலாம். எனவே, எந்தவொரு பரிவர்த்தனையைச் செய்வதற்கு முன், சலுகைகள் அல்லது தள்ளுபடிகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ரூபே கிரெடிட் கார்டை சேர்க்கும் முன், உங்கள் வங்கியின் யுபிஐ செயல்படுத்தல் அம்சம் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். யுபிஐ பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது, மாத இறுதியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications