மத்திய மாநில அரசின் பல்வேறு நலத் திட்டங்களை பெற வேண்டுமானியின் குறிப்பாக அரசு மானியங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கு கட்டாய ஆவணங்களில் ஒன்றாக இருப்பது ஆதார் அட்டை. வங்கியில் ஹோம் லோன் வாங்குவது முதல் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்குவது வரையில் ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது.
ஆதார் அட்டை ஒருவரின் முழுப்பெயர், நிரந்தர முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட குடிமக்கள் முக்கிய பர்சனல் தகவல்களைக் கொண்டிருப்பதால் முக்கியமான அடையாளச் சரிபார்ப்பு ஆவணமாகக் விளங்குகிறது. இவை அனைத்தையும் தாண்டி ஆதார் அட்டையில் இருக்கும் சிறப்பு 12 இலக்க எண் அரசுக்கு முக்கியமான தரவாக விளங்குகிறது.

UIDAI எனப்படும் இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் தான் ஆதார் அட்டையை வழங்குவதில் இருந்து, அதன் தரவுகளை நிர்வாகம் செய்யவது வரையில் சகலமும் செய்கிறது. இந்த நிலையில் பெரியவர்களுக்கு ஆதார் அட்டை இருப்பது போல் குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை உள்ளது.
UIDAI அமைப்பு 2018 இல் நீல ஆதார் அட்டை அல்லது பால் ஆதார் என்ற குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை அறிமுகம் செய்தது. இது குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்களில் குழந்தைகளைச் சேர்ப்பதை எளிதாக்குவதில் இந்த ப்ளூ ஆதார் அட்டை முக்கியமான பணியை செய்து வருகிறது.
இந்த ப்ளூ ஆதார் அட்டையின் முக்கிய அம்சம் என்னவென்றால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் தரவுகளை வழங்கத் தேவையில்லை. மாறாக, அவர்களின் UID அதாவது தனித்துவ அடையாளம் எண்-ஐ பிராந்திய தரவு மற்றும் முகத்தை அடையாளமாக பயன்படுத்தி அவர்களின் பெற்றோரின் UID உடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
நீல ஆதார் அட்டைக்கு (baal aadhaar) விண்ணப்பிப்பது எப்படி?
- UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற இணைய முகவரிக்கு செல்லவும்
- உங்கள் பதிவு படிவத்தில் உரிய விவரங்களை நிரப்பவும்.
- நீல ஆதார் அட்டை பெற அப்பாயின்ட்மென்ட் பதிவு செய்யவும்.
- அருகில் உள்ள என்ரோல்மென்ட் சென்டரை கண்டறிந்து, அங்கு அப்பாயின்ட்மென்ட் பதிவு செய்யவும்.
- உங்கள் (பெற்றோரின்) ஆதார், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் எண் போன்றவற்றை ஆதார் மையத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
- அனைத்து பணிகளும் முடித்த பிறகு, ஸ்டேடஸ் கண்காணிக்க acknowledgement number அளிக்கப்படும்.


Click it and Unblock the Notifications