சென்னை: இந்தியாவில் பான் கார்டு மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. வருமானவரித் தாக்கல் செய்வதற்கு, பேங்க் பரிவர்த்தனைக்கு என அனைத்திற்கும் தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் இதுவும் ஒன்று. பான் கார்டு வருமானவரித்துறையினரால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். இதனை பத்திரமாக வைத்திருப்பது முக்கியம். சிலர் தவறுதலாக இதனைத் தொலைத்தால் மீண்டும் எப்படி டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது என்பதைப் பார்ப்போம்.
இந்தியாவில் வரி செலுத்துவதற்கு பான் கார்டு அவசியமாகிறது. வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கும், தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படும் ஆவணங்களில் பான் கார்டு ஒன்று. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டால் தனி நபர்கள் புதிய பான் எண் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் வருமான வரித்துறையின் மூலம் டூப்ளிகேட் பான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான தகவல் திருட்டு என்பது, தனிநபர்களின் பர்சனல் டேட்டா-வை டார்கெட் செய்யப்பட்டு நடக்கிறது. இந்த நிலையில் உங்கள் பான் கார்டு திருடப்பட்டால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட வேண்டும், இதேபோல் உங்கள் பான் எண்-ஐ பயன்படுத்தி வேறு யாரேனும் முறைகேடுகள் செய்கிறார்களாக என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதை வருமான வரி தளத்தில் காலாண்டு அடிப்படையில் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் பான் கார்டு தொடர்பான மோசடிகளைத் தடுக்கலாம்.

டூப்ளிகேட் பான் கார்டு என்றால் என்ன?: டூப்ளிகேட் பான் கார்டு என்பது உங்களுடைய உண்மையான பான் கார்டு தொலைந்து விட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ பான் வைத்திருப்பவருக்கு வருமானவரித் துறையினரால் வழங்கப்படும் ஆவணம் ஆகும். பல தனிநபர்கள் கவனக்குறைவு காரணமாக, முக்கியமான ஆவணங்களைத் தொலைத்து விடுகின்றனர். இது போன்ற நேரங்களில் நீங்கள் டூப்ளிகேட் பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
டூப்ளிகேட் பான் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டேப் 1: TIN-NSDL போர்ட்டலின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டேப் 2: அப்ளிகேஷன் டைப் என்பதில் "Changes or correction in existing PAN data/ Reprint of PAN card (No changes in existing PAN data)" என்பதை செலக்ட் செய்து, உங்களுடைய பெயர், டேட் ஆஃப் பர்த், மெயில் ஐடி, மொபைல் நம்பர், கேப்ட்ச்சா குறியீடு ஆகியவற்றை என்டர் செய்து "Submit" செய்யவும்.
ஸ்டேப் 3: தற்போது உங்களுடைய மெயில் ஐடிக்கு ஒரு டோக்கன் நம்பர் அனுப்பப்படும். அந்த டோக்கன் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு பின்னர் தேவைப்படலாம்.
ஸ்டேப் 4: அதன் பிறகு "Continue with PAN application form" என்பதைக் கிளிக் செய்யவும். தற்போது உங்களுடைய சுய விபரங்களை கொடுத்து சமர்ப்பிக்கவும். உங்களுடைய பான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மூன்று வழிகள் உள்ளன.
1. உங்களுடைய கோரிக்கையை சமர்ப்பித்து, டூப்ளிகேட் பான் கார்டு பெற விண்ணப்பித்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகைப் படிவத்தை பிரின்ட் செய்து, அதனுடன் தேவைப்படும் ஆவணங்களை இணைத்து NSDL சேவை பிரிவுக்கு தபால் மூலம் அனுப்பலாம்.
2. உங்களுடைய ஆதார் கார்டை வைத்து டூப்ளிகேட் பான் கார்டு பெறுவதற்கு பயன்படுத்தலாம். இதில், நீங்கள் டிஜிட்டல் கையொப்பம் செய்தால் போதுமானது.
3. உங்களுடைய ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்கலாம்.
ஸ்டேப் 5: அதன் பிறகு உங்களை தொடர்பு கொள்ள தேவைப்படும் பிற விவரங்களை என்டர் செய்யவும். கட்டணம் செலுத்தும் பக்கத்திற்கு சென்று கட்டணத்தை முடிக்கவும். வெற்றிகரமாக பணம் செலுத்திய உடன், உங்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு அனுப்பப்படும். உங்களுடைய டூப்ளிகேட் பான் கார்டை சரி பார்க்க 15 இலக்க நம்பரை பயன்படுத்தவும். அதன்பிறகு இரண்டு வாரத்திற்குள் உங்களுடைய பான் கார்டு வீட்டிற்கு அனுப்பப்படும்.
இந்த செயல்முறை பெரிதாக இருக்கிறது, என்று நினைப்பவர்கள் எளிதாக அருகில் உள்ள பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications