தற்போது லேர்னர் லைசென்ஸ் பெறுவது எளிதாகிவிட்டது. லேர்னர் லைசென்ஸ் என்று சொல்லப்படுகிற தற்காலிக ஓட்டுநர் உரிமம் (Temporary DL) பெறுவதற்கான செயல்முறை இப்போது முழுக்க முழுக்க ஆன்லைனில் நடைபெறுகிறது. இதன் மூலம் நீங்கள் வீட்டிலிருந்து லேர்னர் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பதிவில் எவ்வாறு டெம்ப்ரவரி DL பெற விண்ணப்பிப்பது என்பதை விரிவாக பார்ப்போம்.
லேர்னர் லைசென்ஸ் (Learner License) பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள், இனி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு (DTO) செல்ல வேண்டியதில்லை. வீட்டிலிருந்தே டிரைவிங் டெஸ்ட் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த விண்ணப்பதாரர்கள் பரிவஹான் இணையதளத்தில் தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி எளிதாக விண்ணப்பிக்கலாம்.

போக்குவரத்து துறை, இணையதளத்தில் ஆன்லைன் டெஸ்ட் எடுப்பதற்கு பயனர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும், விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களையும் தகவல்களையும் இணையதளம் வழங்கும். சோதனைக்கு முன்னதாக, விண்ணப்பதாரர்கள் போக்குவரத்து விதிகள் குறித்த பயிற்சி வீடியோவைப் பார்க்க வேண்டும். இந்த வீடியோ சோதனை பற்றிய அடிப்படை தகவல்களையும் சாலை அடையாளங்கள், வேக வரம்புகள் மற்றும் ஓட்டுநரின் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்களையும் வழங்குகிறது.
சோதனை நேரத்தில், விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கேள்விகளில் சாலை அடையாளங்களை அடையாளம் காணுதல், அவற்றின் அர்த்தங்களை புரிந்துகொள்ளுதல், பல்வேறு பகுதிகளுக்கான வேக வரம்புகளை அறிந்துகொள்ளுதல் போன்றவை அடங்கும்.
ஆன்லைனில் லேர்னர் லைசென்ஸ் பெற விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: https://parivahan.gov.in/parivahan/ என்ற போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: "Drivers/Learner License" பகுதிக்குச் சென்று "More" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களிலிருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்வுசெய்து, பின்னர் "Apply for Learner License" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: திரையில் காட்டப்படும் வழிமுறைகளை கவனமாகப் படித்து, "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க, "Submit Via Aadhaar Authentication" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 6: உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் பெறப்பட்ட OTP-ஐ என்டர் செய்யவும்.
ஸ்டெப் 7: மெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பர் போன்ற தேவையான தகவல்களை நிரப்பவும். அதன் பிறகு, "Self Declaration (Form 1)" பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 8: திரையில் கேட்கப்படும் உங்கள் உடல்நலம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
ஸ்டெப் 9: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும்.
நீங்கள் வீட்டிலிருந்து லேர்னர் லைசென்ஸ் பெற முடியும் என்றாலும், நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனையை மேற்கொள்ள நீங்கள் RTO அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். உரிமத்தின் வகையைப் பொறுத்து வெவ்வேறு மாநிலங்களில் லைசென்ஸ் கட்டணம் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications