ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக நம் நாட்டில் தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. முன்பெல்லாம் இதற்கு விண்ணப்பிக்க அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான சட்ட மற்றும் அரசாங்க ஆவணங்களை ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்தே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதேபோல ஸ்மார்ட் கார்டையும் வீட்டிலிருந்து விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதிவில் ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம்.
ஸ்மார்ட் ரேஷன்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்படும் அரசாங்க ஆவணமாகும். இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளின் டிஜிட்டல் பதிப்பையும் நீங்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் ரேஷன் கடைகளிலிருந்து பொருட்களை வாங்க ஸ்மார்ட் கார்டுகளை கையில் எடுத்துச் செல்வதற்கு பதிலாக டிஜிட்டல் பதிப்பை காட்டியும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை, எண்ணெய், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது.

ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பதற்கான தகுதி: தமிழ்நாட்டில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பதற்கு கீழ்காணும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
1. முதலாவதாக நீங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. உங்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. உங்கள் பெயரில் சொத்து அல்லது சொந்த வாகனம் எதுவும் இருக்கக் கூடாது.
4. அரசு வேலையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாரும் ரேஷன் கார்டு பெற தகுதியானவர்கள் கிடையாது.
ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?: ஆன்லைனில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க, நீங்கள் கீழ்க்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றலாம்.
ஸ்டெப் 1: முதலில் அதிகாரப்பூர்வ TNPDS இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: அதன்பின் ஸ்மார்ட் கார்டு அப்ளிகேஷன் பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: நீங்கள் புதிதாக நுழைபவராக இருந்தால் போர்ட்டலில் உங்களுடைய பதிவு செயல்முறையை முடிக்கவும்.
ஸ்டெப் 4: விண்ணப்ப படிவத்தில், தேவைப்படும் தகவல்களைத் துல்லியமாக நிரப்பவும்.
ஸ்டெப் 5: பின்னர் தேவையான ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
ஸ்டெப் 6: குடும்ப உறுப்பினர்கள், எரிவாயு இணைப்பு பற்றிய தேவையான விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 7: சப்மிட் பட்டனை கிளிக் செய்து செயல்முறையை முடிக்கவும்.
இந்த செயல்முறை முடிந்ததும் உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். இந்த நம்பரை பிற்கால குறிப்புக்காக பத்திரமாக வைத்திருங்கள். ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பெறுவதற்கு எந்த வித கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications