வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா, அரசு திட்டங்களில் இணைய வேண்டுமா, ஏன் மொபைலில் பயன்படுத்தப்படும் சிம் வாங்க வேண்டும் என்றாலும் கூட, ஆதார் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் புதிதாக ஒரு ஆதார் கார்டு எடுக்கணும்னா இன்னும் பழைய காலத்தில் இருக்குற மாதிரி ஆதார் சென்டருக்கு போய் வரிசையில் நிக்கணுமேனு யோசிக்கிறீங்களா? இனி அந்த கவலை வேண்டாம்.
2026-ன் லேட்டஸ்ட் அப்டேட்களின் படி, ஆன்லைன் மூலமாகவே மிக எளிதாக அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்து, அலையாமல் ஆதார் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஆவணங்கள் விஷயத்தில் இப்போது விதிமுறைகள் இன்னும் கொஞ்சம் கடினம் ஆகியிருக்கிறது. என்னென்ன ஆவணங்கள் கட்டாயம் இருக்கணும்? ஆன்லைனில் எப்படி அப்ளை செய்யணும்? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

ஆப்லைனில் எப்படி?
புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்க நேரடியாக ஆதார் மையங்களுக்கே சென்றாலும் கூட, ஆன்லைனில் அப்பாயின்ட்மெண்ட் புக் செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
1. முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யுங்கள்.
2. முகப்பு பக்கத்தில் உள்ள My Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதன் கீழாக உள்ள Book An Appointment என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்து ஒரு புதிய பக்கத்தில் தொடங்கும். அதில் உங்களுடைய பெயர், மொபைல் எண் கேப்ட்சா எழுத்துகளை சரியாக கொடுத்து, OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு ஓடிபி வரும். ஓடிபியை கொடுத்து அப்டேட் செய்தால் அது மற்றொரு பக்கத்தில் தொடங்கும்.
4. அங்கு உங்களுடைய வயது விவரம், நீங்கள் எந்த வகையான கார்டுக்கு அப்ளை செய்யப் போகிறீர்கள் என விவரங்கள் கொடுத்து proceed for centre selection என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பின்கோடு கொடுத்தும் புக் செய்யலாம்.
5. நீங்கள் புதிய ஆதார் அப்ளை செய்கிறீர்கள் எனில் New Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பிறகு உங்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
6. நீங்கள் சமர்பிக்க போகும் ஆவணங்களை பட்டியலில் இருந்து தேர்வு செய்யுங்கள். இறுதியாக உங்களுக்கு வசதியான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்து முன்பதிவை உறுதி செய்யுங்கள்.
7. நீங்கள் முன்பதிவு வெற்றிகரமாக செய்த பிறகு ஒரு படிவம் வரும். அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
8. அதை கொண்டு, உங்கள் அப்பாயின்மென்ட் புக் செய்த நாளில், அசல் ஆவணங்களுடன், குறிப்பிட்ட ஆதார் மையத்திற்கு செல்லுங்கள்.
9. புதிய ஆதாருக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படுவதில்லை.
தேவையான ஆவணங்கள்:
பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
விண்ணப்பதாரரின் நேரடி புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் அங்கேயே எடுக்கப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications