வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு, பான் கார்டு மிகவும் முக்கியமானது. தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்காக இந்திய வருமான வரித் துறையால் வழங்கப்படும் பத்து இலக்க எண் தான் இது. ஒவ்வொரு வரி செலுத்துபவருக்கும் தனித்த அடையாளமாக பான் கார்டு செயல்படுகிறது. இவ்வளவு முக்கியமான பான் கார்டை ஆதார் கார்டு வைத்து 5 நிமிடத்தில் பெறுவது எப்படி? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆதார் கார்டைப் போன்றே பான் கார்டையும் பெறுவதற்கு ஒரு சில நாட்கள் ஆகலாம். முதலில் அதற்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு உங்களுடைய பான் கார்டு, உங்களை வந்தடையும். ஆனால் அவசரமாக பான் கார்டு தேவை என்று சொல்பவர்களுக்கு, வருமானவரித்துறை சிறப்பான அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவே இ-பான் கார்டு.

இ-பான் கார்டு என்பது டிஜிட்டல் பான் கார்டு ஆகும். இதனை எளிதில் நீங்கள் விண்ணப்பித்த சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அதில் உள்ள பான் எண்ணை, அடுத்தடுத்த உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்த முடியும். எப்படி ஒரு சில நிமிடங்களில் இன்ஸ்டன்ட் முறையில் பான் கார்டு பெறுவது? என்பதை பார்ப்போம்.
இ-பான் என்பது டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பான் கார்டு ஆகும், இது ஆதாரின் e-KYC தரவின் அடிப்படையில் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது. மேலும் இது PDF வடிவில் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
இ-பான் கார்டை உடனடியாகப் பெறுவது எப்படி?
ஸ்டெப் 1: நீங்கள் வருமான வரித் துறையின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரபூர்வ இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: இதற்குப் பிறகு, இ-ஃபைலிங் போர்டல் ஹோம் பேஜில் கிளிக் செய்து, "Instant e-PAN" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: பிறகு "e-PAN" பக்கத்தில், "Get New e-PAN" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: தற்போது உங்களின் 12 இலக்க ஆதார் நம்பரை என்டர் செய்து, "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: பின்னர் OTP சரிபார்ப்பு பக்கத்தில், "நான் ஒப்புதல் விதிமுறைகளைப் படித்துவிட்டேன், மேலும் தொடர ஒப்புக்கொள்கிறேன்" என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பின் "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP-ஐ என்டர் செய்யவும்.
ஸ்டெப் 7: UIDAI உடன் ஆதார் விவரங்களை சரிபார்க்க தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் "Continue" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 8: சமர்ப்பித்த பிறகு, ஒப்புகை எண்ணுடன், செய்தி திரையில் காட்டப்படும்.
ஸ்டெப் 9: தற்போது "Download E-PAN" என்பதைக் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
மேற்கண்ட ஸ்டெப்ஸ்களை பயன்படுத்தி நீங்கள் எளிதில் இன்ஸ்டன்ட் பான் கார்டு பெற முடியும். மேலும், அதனை PDF வடிவில் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications