தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் நலனுக்காக பல்வேறு முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகள் தடை படாமல் கல்வி பயில வேண்டும், அவர்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் : 1990களில் தமிழ்நாட்டில் பெண் சிசு கொலை, குழந்தை திருமணம் உள்ளிட்டவை அதிகமாக இருந்தது. இந்த பிரச்சினையை போக்க வேண்டும் பெண் குழந்தைகள் பிறப்பு மற்றும் அவர்கள் கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 1992 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.

பெண் குழந்தை உரிமைகள்: பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது ,அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, பாலின பாகுபாட்டை தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுதான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தாலும் சரி, 2 பெண் குழந்தைகள் மட்டும் பிறந்து இருந்தாலும் சரி அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். அவர்களுக்கு 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இரண்டு வகைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நோக்கம் என்ன: தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை தான் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது ,அவர்கள் இடைநிற்றல் இல்லாமல் 18 வயது வரை கல்வியை நிறைவு செய்வதை உறுதி செய்வது, 18 வயதிற்குள் அவர்களுக்கு திருமணம் நடைபெறாமல் தடுப்பது ஆகியவைதான் இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம்.
1 பெண் குழந்தை : ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்து இருந்தால் அந்த குழந்தையின் பெயரில் நிலையான வைப்பு தொகையாக 50,000 ரூபாய் வரவு வைக்கப்படும். தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த தொகையானது முதலீடு செய்யப்படும். இந்த வைப்பு தொகை ரசீது நகல் அந்த பெண் குழந்தையின் பெயரில் அந்த குடும்பத்திடம் வழங்கப்பட்டு விடும். இந்த பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும்போது தான் இந்த பணத்தை அவர்களால் பெற முடியும்.

2 பெண் குழந்தைகள்: ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்து இருந்தால் அந்த பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைத்து தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும். இதற்கான ரசீது நகல்கள் அந்தந்த குழந்தைகளின் பெயரில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இந்த வைப்பு தொகையானது ஒவ்வொரு ஐந்து ஆண்டு முடிவிலும் புதுப்பிக்கப்படுகிறது. 18 வயது நிறைந்த உடன் வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகை பெண் குழந்தைகளிடம் வழங்கப்படும்.
என்னென்ன நிபந்தனை: இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்ய பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், இவர்கள் யாரேனும் ஒருவர் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும் ஆண் வாரிசு இருக்கக் கூடாது. இந்த குடும்பத்தின் ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும், ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.

என்னென்ன சான்றிதழ்கள் தேவை: இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களின் குடும்ப புகைப்படம், திருமணச்சான்று, இருப்பிடச் சான்று,கருத்தடை செய்து கொண்டதற்கான சான்று, குடும்ப அட்டை மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டை, பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப வருமானச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களோடு விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் தங்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழை தங்கள் மாநகராட்சி, ஊராட்சி அல்லது பஞ்சாயத்து அலுவலகத்தில் பெற வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்: பொது சேவை மையங்களில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும் , இந்த சான்றிதழ்களை கொண்டு சென்றால் அவர்கள் விண்ணப்பம் செய்து தருவார்கள். இதனை அடுத்து விண்ணப்பம் செய்யப்பட்டதற்கான ரசீது உங்களுக்கு வழங்கப்படும்., இதனை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். இல்லை எனில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். அதிகாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்து உங்களை தொடர்பு கொள்வார்கள்.
முதிர்வு தொகை பெறுவது எப்படி: இந்த திட்டத்தில் இணைந்துள்ள பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியானதும் உதவி தொகைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். அந்த பெண்ணின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார் சான்றிதழ் ,வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் , மகள் மற்றும் தாயின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பெண் குழந்தைகள் திட்டத்திற்கு விண்ணப்பித்து வைக்கப்பட்டதற்கான ஆவணம், வைப்புத்தொகை ரசீது அனைத்தையும் இணைத்து சமூக நலத்துறையாக அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதிகாரிகள் இவற்றை ஆய்வு பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பார்கள்.
முகாம்: தற்போது தமிழ்நாடு அரசு நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் விண்ணப்பம் செய்ய எண்ணுபவர்கள் நேரடியாக உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்றால் போதும் ஒரே நாளிலேயே வேலையை முடித்து கொள்ள முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications