சென்னை: இந்தியாவில் தற்போது முக்கியமான ஆவணமாக பான் கார்டு மாறி இருக்கிறது. இது ஒரு அடையாள ஆவணமாகவும் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருவரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும் வருமானவரி கணக்குகளை நிர்வகிக்கவும் பான் கார்டுகள் மிகவும் அவசியமாகின்றன. எனவே தான் வேலைக்கு செல்லும் பலரும் கட்டாயம் அவர்கள் பெயரில் பான் கார்டு வைத்திருப்பார்கள். இவ்வாறு பான் கார்டை பயன்படுத்துபவர்கள் எதிர்பாராத விதமாக அதனை தொலைத்து விட்டால் அதற்கு மாற்றாக எளிதாக டூப்ளிகேட் பான் கார்டை பெற முடியும். அதற்கு என்ன நடைமுறை என்பதை தான் நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி?:

ஸ்டெப் 1: டூப்ளிகேட் பான் கார்டு பெறுவதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் TIN-NSDL platform. இந்த இணையதளத்திற்கு சென்று 'Services’ என்பதில் 'PAN’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: அதில் 'Reprint of PAN Card’ என்ற பகுதியில் 'Apply’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்ப படிவம் தோன்றும் அதில் சரியான வகையை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி 'Submit’ கொடுக்க வேண்டும் . உடனே உங்களின் பதிவு செய்யப்பட்ட ஈமெயில் ஐடிக்கு acknowledgement எண் வந்துவிடும்.
ஸ்டெப் 4: பின்னர் அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பி, உங்களுக்கு பொருத்தமான பான் ஆவணத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5: உங்களுக்கு e-PAN card அல்லது physical PAN card எது தேவை என்பதை தேர்வு செய்யவும். e-PAN card தேர்வு செய்தால் உங்கள் ஈமெயிலுக்கு அது வந்து சேர்ந்துவிடும்.
physical PAN card என்பதை தேர்வு செய்தால் உங்கள் முகவரிக்கு பான் அட்டை அனுப்பி வைக்கப்படும்.
ஸ்டெப் 6: இதனை நிறைவு செய்த பிறகு கட்டணம் செலுத்தும் பக்கம் தோன்றும். அதில் கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்யும் போது ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற அடையாள சான்று, முகவரி சான்று, வயது சான்று , பான் எண் ஆகியவை வழங்க வேண்டும். டூப்ளிகேட் பான் கார்டுக்கு ஆப்ஃலைனிலும் விண்ணப்பம் செய்யலாம். NSDL தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் செய்து விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டி அடையாள ஆவணங்களோடு அந்த விண்ணப்பத்தை 13/D Kurla Industrial Estate, Nari Seva Sadan Road, Narayan Nagar, Ghatkopar (West), Mumbai - 400 086 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உங்களின் விண்ணப்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு பான் கார்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications