PAN கார்டு அப்ளை பண்றது இவ்ளோ ஈஸியா?.. நீங்களே செய்யலாம்..

முதலீடு செய்வது, வருமான வரி தாக்கல் செய்வது, சம்பளம் பெறுவதற்காக வங்கி கணக்கு தொடங்குவது என முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கு தேவைப்படும் ஒரு ஆவணம் பான் கார்டு. தமிழில் இதனை நிரந்தர கணக்கு எண் என கூறுகிறோம். வருமான வரித்துறை நமக்கு இந்த பான் கார்டினை வழங்குகிறது.

பொதுவாக பான் எண் எண்பது ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்களின் கலவையுடன் 10 இலக்க எண்ணாக இருக்கும். இதுவரை நீங்கள் பான் கார்டு வாங்கவில்லை , எளிதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்து எப்படி வாங்கலாம் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்..

PAN கார்டு அப்ளை பண்றது இவ்ளோ ஈஸியா?.. நீங்களே செய்யலாம்..

1. உங்களின் பிரவுசரில் NSDL அல்லது UTIITSL இணையதளத்திற்கு சென்று 'New PAN' என்ற பிரிவை தேர்வு செய்யுங்கள். இதனை அடுத்து படிவம் 49ஏ (form 49A) தோன்றும்.
2. படிவத்தில் கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். எந்த தவறும் இல்லாமல் தகவல்களை உள்ளீடு செய்வது அவசியம்.
3. தகவல்களை நிரப்பி சப்மிட் செய்த உடன், கட்டணம் செலுத்தக் கூறும். பான் கார்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
4. விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடன், அதனை உறுதிப்படுத்தும் ஒரு ரசீது உங்களுக்கு கிடைக்கும். அதில் 15 இலக்க எண்கள் இடம்பெற்றிருக்கும்.
5. உங்களது விண்ணப்பத்தை உறுதிப்படுத்த நீங்கள் ஆதார் ஓடிபி மூலம் e-signing செய்து கொள்ளலாம்.
6. ஆதார் மூலம் உறுதிப்படுத்தாதவர்கள், தேவைப்படும் ஆவணங்களை NSDL/UTIITSL அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
7. உங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். இதற்கு 15 நாட்கள் தேவைப்படும். பின்னர் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கே உங்களது பான் கார்டு அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது Instant PAN என்ற வசதியையும் நமது வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறையில் சில நிமிடங்களிலேயே உங்களுக்கான E-PAN ஐ பெற்றுக் கொள்ளலாம்.

1. வருமான வரித்துறையில் Income Tax e-filing பக்கத்திற்கு செல்லுங்கள்
2. அங்கே 'Instant E-PAN' என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. அதில் கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். குறிப்பாக ஆதார் தகவல்களை சரியாக வழங்க வேண்டும்.
4. இதனை அடுத்து 'Get New E-PAN' என்பதை கிளிக் செய்ய வேண்டும், பின்னர் தகவல்களை உறுதிப்படுத்த 'I confirm that' என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
5. இதன் பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்களின் தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி-ஐ உள்ளீடு செய்ய வேண்டும்.
6. அப்போது உங்களின் ஆதார் தகவல்கள் திரையில் தோன்றும். அவை சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
7. இதன் பின்னர் 'Confirm and continue with e-KYC data" என்பதை கிளிக் செய்யவும்.

8. சில நிமிடங்களில் உங்களின் e-PAN உருவாக்கப்பட்டு , மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+