சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக இருக்கிறது. ரேஷன் கார்டு இருந்தால் தான் ரேஷன் கடைகள் மூலம் கிடைக்கும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவற்றை நம்மால் வாங்க முடியும்.
ரேஷன் கார்டு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்வது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. நம் செல்போன் வாயிலாகவே வீட்டில் இருந்தபடியே புதிதாக ரேஷன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளை தான் தற்போது நாம் விரிவாக இதில் தெரிந்து கொள்ள போகிறோம். புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கான அதிகாரபூர்வ இணையதளமான https://www.tnpds.gov.in/ க்கு செல்ல வேண்டும் .

எப்படி விண்ணப்பம் செய்வது?: இந்த இணையதளத்தில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து வரக்கூடிய பக்கத்தில் நாம் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும். முதலில் குடும்ப தலைவரின் பெயர் , குடும்பத் தலைவரின் கணவர் அல்லது தந்தையின் பெயரை பூர்த்தி செய்ய வேண்டும் .அடுத்ததாக முகவரியை பூர்த்தி செய்ய வேண்டும் . ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் இந்த விவரங்களை உள்ளிடுவது கட்டாயம் .
குடும்பத் தலைவர்: குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம் இது 5 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக நீங்கள் வசிக்கக்கூடிய மாவட்டத்தின் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும் ,மாவட்டத்தை தொடர்ந்து உங்களுக்கு உட்பட்ட வட்டம் ,உங்களின் கிராமத்தின் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும், உங்களின் அஞ்சல் குறியீடு உள்ளீடு செய்ய வேண்டும்.

செல்போன் எண்ணில் கவனம்: இதனை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தக்கூடிய செல்போன் எண்ணை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செல்போன் எண்ணில் தான் உங்களுடைய ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து வித தகவல் பரிமாற்றங்களும் நடைபெறும் என்பதால் நீங்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய செல்போன் எண்ணை உள்ளிடுவது கட்டாயமாகும்.
குடும்ப உறுப்பினர்கள்: பின்னர் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உள்ளிட வேண்டும். குடும்ப உறுப்பினரின் பெயர், பாலினம் ,அவர் மாற்றுத்திறனாளியா இல்லையா ,பிறந்த தேதி, உறவு முறை ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து எந்த வகையிலான ரேஷன் கார்டை நீங்கள் கேட்கிறீர்கள் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் .பண்டகம் இல்லா அட்டை .அரிசி அட்டை .சர்க்கரை அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் .
என்னென்ன ஆவணங்கள் தேவை: உங்களுடைய முகவரிக்கான சான்றினை கட்டாயமாக வழங்க வேண்டும். இது குடும்ப தலைவரின் ஆதார் அட்டையாக இருக்கலாம் அல்லது உங்கள் முகவரியை காட்டும் மின்சார கட்டண ரசீதாக இருக்கலாம் , வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, உங்களுக்கு சொந்த வீடு இருக்கிறது என்றால் அதன் சொத்து வரிக்கான ரசீதை தாக்கல் செய்யலாம் அல்லது பாஸ்போர்ட், வாடகைக்கு குடியிருப்போர் வீட்டு வாடகை ஒப்பந்தம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை குறிப்பிட்டு அதனை பதிவேற்றமும் செய்ய வேண்டும்.
30 -45 நாட்களில் ரேஷன் கார்டு :இதனை அடுத்து உங்களுக்கு எரிவாயு இணைப்பு இருக்கிறதா இல்லையா என்ற விவரம் கேட்கப்படும் பின்னர் சமர்ப்பித்தால் உங்களுடைய விண்ணப்பம் தொடர்பான ஒரு குறிப்பு எண் வழங்கப்படும். நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த குறிப்பு எண்ணை கொண்டுதான் எதிர்காலத்தில் உங்களுடைய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க முடியும். 30 முதல் 45 நாட்களுக்குள் ரேஷன் அட்டை விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்ற தகவல் உங்களை வந்து சேர்ந்துவிடும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications