புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் அவர்களுடைய கையில் பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டு இருந்தாக வேண்டும். இந்தியாவில் ஒரு காலத்தில் பாஸ்போர்ட் பெறுவது என்பது மிக சிக்கலான ஒரு விஷயம். பாஸ்போர்ட் பெறுவதற்கு நாம் விண்ணப்பம் செய்து, காவல்துறை சரிபார்ப்பு முடிந்து, நம்முடைய ஆவணங்கள் சரி பார்ப்பு முடிந்து கையில் பாஸ்போர்ட் வந்து சேர்வதற்கு ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகிவிடும்.

தற்போது அனைத்துமே ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுவிட்டன. டிஜிட்டல் முறையில் நாம் வீட்டில் இருந்தபடியே பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்யலாம். குறிப்பிட்ட அந்த அப்பாயிண்ட்மெண்ட் தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சரி பார்த்து முடித்து விட்டால் போதும். ஒரு வாரத்திற்குள்ளாகவே நம்முடைய கைக்கு பாஸ்போர்ட் வந்து சேர்ந்துவிடும்.

புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்வது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?

இந்தியாவில் தற்போது நவீனமான இ-பாஸ்போர்ட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. நம்முடைய பயோமெட்ரிக் தகவல்கள் அடங்கிய ஆர்எஃப்ஐடி சிப் பொருத்தப்பட்ட இ- பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. தற்போது வீட்டில் இருந்தே பாஸ்போர்ட் பெற எப்படி விண்ணப்பம் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். இதற்கு முதலில் பாஸ்போர்ட் வழங்கக்கூடிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.passportindia.gov.in/psp இணையதளத்திற்கு செல்லுங்கள்.

ஏராளமான போலியான தளங்களும் இருக்கிறது என்பதால் அவற்றை கிளிக் செய்து ஏமாந்து விடக்கூடாது. https://www.passportindia.gov.in/psp இதுதான் மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான பாஸ்போர்ட் இணையதளம். இந்த இணையதளத்திற்கு சென்றவுடன் முதலில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ரிஜிஸ்டர் செய்து கொள்வதற்கு உங்களுடைய பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்து உங்களுக்கென ஒரு லாகின் ஐடி, பாஸ்வேர்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நடைமுறை முடிந்தவுடன் நீங்கள் உங்களுடைய லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து லாகின் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு லாகின் செய்தவுடன் apply for new passport என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்தவுடன் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் அடங்கிய பக்கம் தோன்றும். அதில் எப்படி லாகின் செய்வது, எப்படி விண்ணப்பம் செய்வது என்பன உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

இதனை அடுத்து உங்களுடைய விவரங்கள் கேட்கப்படும். அதில் உங்களுடைய பெயர் மற்றும் அடிப்படை தகவல்களை உள்ளிட வேண்டும். பெயர், பிறந்த தேதி, வயது, முகவரி, அவசரகால தகவல் தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி மொபைல் எண் உள்ளிட்ட அனைத்தும் கேட்கப்படும். இதனை அடுத்து உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகிய இரண்டையும் நீங்கள் அப்லோட் செய்ய வேண்டி இருக்கும்.

பின்னர் உங்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். இதன் பிறகு அப்பாயின்மென்ட் தேதியை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்டிற்கு 1500 ரூபாய், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கு 2000 ரூபாய் வசூல் செய்யப்படும். இதுவே தட்கல் முறையில் நீங்கள் விண்ணப்பம் செய்தால் சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் இந்த கட்டணத்தை செலுத்திய உடன் உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இருக்கக்கூடிய பாஸ்போர்ட் சேவை மையத்திற்கான அப்பாயின்மென்ட் தேதியை முடிவு செய்து கொடுக்க வேண்டும். இதை எடுத்து உங்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் ரெஃபரன்ஸ் நம்பர் என்பது தோன்றும். அதை நீங்கள் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட அந்த அப்பாயிண்ட்மெண்ட் தேதியில் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். அப்போது உங்கள் கையில் நீங்கள் அனைத்து அடையாள ஆவணங்களின் அசல் ஆவணங்களையும் அவற்றை நகலாக எடுத்து செல்ஃப் அட்டெஸ்ட் செய்தும் கொண்டு செல்ல வேண்டும்.

அங்கே உங்களுடைய ஆவணங்கள் சரி பார்க்கப்படும் மற்றும் உங்களுடைய கைவிரல் ரேகை, புகைப்பட அடையாளம் உள்ளிட்ட அனைத்து பயோமெட்ரிக் தரவுகளும் சேகரிக்கப்படும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கப்படும் பட்சத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும். காவல்துறையினர் வீட்டிற்கு வந்து உங்கள் தகவல்களை சரிபார்ப்பார்கள். போலீஸ் சரிபார்ப்பு நடந்து ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட் உங்கள் முகவரிக்கே வந்து சேர்ந்துவிடும்.

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு ஆதார் அட்டை ,வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், பான் கார்டு , வீட்டு வாடகை ஒப்பந்தம் ஆகியவை அடையாள மற்றும் முகவரி ஆவணங்களாக ஏற்கபடுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+