இந்தியாவில் உள்ள நலிவுற்ற விவசாயிகளை ஆதரிக்கும் வகையில் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டில் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் "பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம்". இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. தற்போது விவசாயிகள் அனைவரும் இந்த திட்டத்தின் 18-வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சில செய்தி நிறுவனங்களின் அறிக்கையின் படி PM கிசான் திட்டத்தின் 18-வது தவணை அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்களுக்கு வர வேண்டிய நிதி உதவியில் எந்தவித தாமதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய 2 அத்தியாவசிய பணிகளை முடிக்க வேண்டும். அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்தியா விவசாய நாடாக இருப்பதன் காரணமாக விவசாயிகளுக்கு ஆதரவாக பல நல்ல திட்டங்களை வழங்கும் அரசு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்குகிறது. இந்தத் தொகை ஒரே தவணையில் வழங்கப்படுவதில்லை. 3 தவணைகளாக சுமார் 2000 வீதம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே 17 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் சுமார் 12 கோடி விவசாயிகள் தற்போது 18-வது தவணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பலன்களைத் தொடர்ந்து பெற, விவசாயிகள் 2 முக்கியமான பணிகளை முடிக்க வேண்டும்
e-KYC அப்டேட்: PM கிசான் திட்டத்தின் பயனாளிகளின் அடையாளத்தை சரிபார்க்க e-KYC செயல்முறை முக்கியமானது. அதை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
ஸ்டெப் 1: pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: ஹோம் பேஜில், "e-KYC" என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்து "Search" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும். OTP-ஐ என்டர் செய்து "Submit" என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் e-KYC வெற்றிகரமாக புதுப்பிக்கப்படும்.
நில சரிபார்ப்பு செயல்முறை: நில சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே PM கிசான் திட்டத்தின் பலன்கள் கிடைக்கிறது.
ஸ்டெப் 1: அதற்கு முதலில் அருகிலுள்ள CSC மையத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: நிலச் சரிபார்ப்புப் படிவத்தைப் பெற்று, தேவையான விவரங்களுடன் நிரப்பவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் அட்டை, நில ரசீது மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் படிவத்தை CSC ஆபரேட்டரிடம் சமர்ப்பிக்கவும். CSC ஆபரேட்டர் நில சரிபார்ப்பு செயல்முறையை செய்வார்.


Click it and Unblock the Notifications