பஸ் தவிர இப்போதெல்லாம் விமானம், ரயில்களில் பயணம் செய்வதற்கு உங்களது புகைப்படம் அடங்கிய அடையாள அட்டையை சான்றாகக் காட்ட வேண்டியிருக்கிறது. இதில் ஆதார் அட்டையை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இதுதவிர வெளியூர்களில் ஹோட்டல்களில் தங்கும்போது அல்லது மதுபான பார்களில் மது அருந்துவதற்கும், புதிய செல்போன் சிம்களை வாங்குவதற்கும் உங்களது அடையாள அட்டை அல்லது ஆதார் கார்டை கேட்கின்றனர். அப்படிப்பட்ட சமயங்களில் நாம் தரும் ஆதார் விவரங்களை அவர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்கு அதிகளவில் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற நேரங்களில் மாஸ்க்டு ஆதார் உங்களுக்குக் கைகொடுக்கும். இந்த மாஸ்க்டு ஆதாரில் உங்களது ஆதார் எண்ணின் முதல் எட்டு எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். அதுதவிர முகவரி உள்ளிட்ட விவரங்கள் தெரியும்.
நீங்கள் டவுண்லோடு செய்யும் இ-ஆதாரில் உங்களுடைய ஆதார் எண்ணை மறைக்கும் வசதியை இந்த மாஸ்க் ஆதார் அளிக்கிறது.
மாஸ்க்டு ஆதார் எண்ணில் முதல் 8 எண்களுக்குப் பதிலாக "xxxx-xxxx" என்றும் கடைசி 4 இலக்கங்கள் மட்டும் தெரியும்.
உங்களது ஆதார் விவரங்களை பத்திரமாக பாதுகாக்க எப்போது மாஸ்க் ஆதாரைக் காட்டவேண்டும் எப்போது ஒரிஜினல் ஆதார் விவரங்களைக் காட்ட வேண்டும் என்பதைப் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். UIDAI நெறிமுறைகளின்படி லைசென்ஸ் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டும் உங்களது ஆதார் விவரங்களை குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டும் சேகரித்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
அப்படி UIDAI லைசென்ஸ் பெறாத நிறுவனங்களான மதுபான பார்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள் உங்களது ஆதார் விவரத்தை சேமித்து வைக்க அனுமதியில்லை. இதுபோன்ற சமயத்தில் மாஸ்க்டு ஆதாரை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
பார்களில் உங்களுக்கு மது வழங்குவதற்கு வயதுக்கான சான்றை கேட்கலாம். மாஸ்க்டு ஆதாரில் உங்களது பிறந்த தேதி தெரியும் என்பதால் இதை தரலாம். அதேவேளையில் வங்கிகள் அல்லது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களிடம் KYC விவரங்களை சேமிக்க மாஸ்க்டு ஆதாரை வழங்க முடியாது.
உதாரணத்துக்கு நீங்கள் டிமாட் அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டியிருந்தால் ஒரிஜினல் ஆதாரைத்தான் தர வேண்டும். ஏனென்றால் உங்கள் விவரங்களை சரிபார்க்க ஆதார் எண் முழுவதும் வேண்டும்.
மாஸ்க்டு ஆதாரை டவுண்லோடு செய்யும் முறை:
ஸ்டெப் 1: myaadhaar.uidai.gov.in இணையதளத்துக்குச் செல்லுங்கள்.
ஸ்டெப் 2: உங்களது ஆதார் எண் அல்லது பதிவு ஐடி அல்லது வெர்ச்சுவல் ஐடியை சமர்ப்பித்து அங்கு தரப்படும் கேப்ச்சா சவாலை முடிக்கவும். தொடர்ந்து 'Send OTP' பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3 : அதே பக்கத்தில் இருக்கும் 'Do you want a masked Aadhaar?' என்ற புதிய பட்டன் தோன்றும். அதை கிளிக் செய்து OTP என்று அதற்கான பாக்ஸில் டைப் செய்யவும். பின்னர் 'Verify and Download' என்பதை கிளிக் செய்யவும்.
இதைத் தொடர்ந்து உங்களது மாஸ்க்டு ஆதாரை PDF ஃபார்மெட்டில் டவுண்லோடு செய்யலாம். அதற்கான பாஸ்வேர்டு, கேபிடல் லெட்டரில் உங்களது பெயரும் கூடவே பிறந்த தேதியும் ஆகும்.
டவுண்லோடு செய்யப்பட்ட PDF ஃபார்மெட் பைல் UIDAI-ஆல் டிஜிட்டல் கையெழுத்திடப்பட்டிருக்கும். அதிலுள்ள Quick Response (QR) கோடை வைத்து உடனடியாக விவரங்களை சரிபார்க்கலாம்.
இவ்வாறு மாஸ்க்டு ஆதாரைப் பயன்படுத்தினால் உங்களது விவரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications