அரசின் 100 சதவீதம் பாதுகாப்பு கொண்ட மிக முக்கியமான சிறு சேமிப்புத் திட்டமாக விளங்கும் பப்ளிக் பிராவிடென்ட் பன்ட் திட்டம் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாத, நிலையான வருமானம் பெற்றால் போதும் என நினைக்கும் பல கோடி நடுத்தர மக்களின் கனவுத் திட்டம் என்றால் மிகையில்லை.
பிபிஎப் என அழைக்கப்படும் பப்ளிக் பிராவிடென்ட் பன்ட் திட்டம் ஓய்வுக்காலத்திற்குத் தேவையான நிதியைச் சேர்ப்பவருக்கும், நீண்ட கால முதலீடு தேவைப்படுபவருக்கும் சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாக உள்ளது.
அனைத்திற்கும் மேலாக இத்திட்ட முதலீட்டின் மூலம் கிடைக்கும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கும் உண்டு.
1 கோடி ரூபாய் கனவு
சரி நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு எவ்விதமான பாதிப்பு இல்லை என்றும், மத்திய அரசு 100 சதவீதம் பாதுகாப்பு அளிக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப்பட்ட பின் உங்களுடைய 1 கோடி ரூபாய் கனவு தொகையை எப்படிச் சாத்தியப்படுத்துவது என்பதை இப்போது பார்ப்போம்.
பிபிஎப் 7.1 சதவீதம் வட்டி
பப்ளிக் பிராவிடென்ட் பன்ட் திட்டம் அனைவருக்குமான திட்டமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு மொத்தமாக அல்லது வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறது.
மாதம் 12, 500 ரூபாய் முதலீடு
தற்போது இருக்கும் 7.1 சதவீதம் வட்டி வருமான அளவீட்டை வைத்துக் கணக்கிடும் போது மாதம் 12, 500 ரூபாய் அல்லது வருடம் 1.5 லட்சம் ரூபாய் தொகையைத் தொடர்ந்து 25 வருடம் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் 1, 03, 08, 015 ரூபாய் பெற முடியும்.
25 வருட முதலீடு
நீங்கள் உங்கள் பப்ளிக் பிராவிடென்ட் பன்ட் திட்டக் கணக்கை 15 வருடத்திலேயே முடிக்க வேண்டும் என நினைத்தாலும் உங்கள் கையில் 40.6 லட்சம் ரூபாய் இருக்கும், தொடர்ந்து நீங்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் இரண்டு முறை பிபிஎப் கணக்கை நீட்டிப்புச் செய்து 25 வருடம் முதலீடு செய்வதன் மூலம் 1 கோடி ரூபாய் இலக்கை அடைய முடியும்.
வட்டி வருமானம்
25 வருடத்திற்குத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் 65.58 லட்சம் ரூபாயை வட்டி வருமானத்தின் வாயிலாக மட்டுமே பெற முடியும். நீங்கள் முதலீடு செய்துள்ள 37.50 லட்சம் ரூபாய் உடன் சேர்த்து 25 வருட முடிவில் 1.03 கோடி ரூபாய் தொகையை மொத்தமாகப் பெறலாம்.
More From GoodReturns

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications