இந்தியாவில் வாகனங்களை வாங்கும் போது மக்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளங்களையும் தங்கள் கார் அல்லது பைக்கோடு தொடர்பு படுத்த விரும்புகின்றனர். இதற்காக பல செல்வந்தர்கள் தங்கள் வாகனங்களுக்கு பேன்சி நம்பர் பிளேட்களைத் தேர்வு செய்கின்றனர். சிலர் தங்கள் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே ஒரு நம்பரை பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த சிறப்புப் நம்பரை ஆர்டிஓ நடத்தும் ஏலத்தின் மூலம் பெறலாம். இந்தப் பதிவில் உங்கள் வாகனங்களுக்கு ஃபேன்சி நம்பர் பிளேட்டை எப்படி பெறுவது? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பதிவு கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள்: பேன்சி நம்பர் பிளேட் பெற விண்ணப்பிப்பவர் ஒரு குறிப்பிட்ட தொகையை பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். அதேபோல ஒருவர் விரும்பும் நம்பருக்கான அடிப்படை விலையையும் பணமாக டெபாசிட் செய்ய வேண்டும்.

ஒரு நபருக்கு ஃபேன்சி நம்பர் ஒதுக்கப்பட்டதும் மீதமுள்ள தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆர்டிஓ-க்கு செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும். மேலும் நம்பர் பிளேட் டெபாசிட் செய்த பணம் திருப்பி தரப்படும். ஆனால் பதிவு கட்டணங்கள் திருப்பி தரப்படாது.
VIP நம்பர் பிளேட்டை பெறுவது எப்படி?: இந்தக் கட்டுரையில், ஒருவர் தனது கார், ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிளுக்கு எப்படி பேன்சி நம்பர் பிளேட்டை முன்பதிவு செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
ஸ்டெப் 1: முதலில் பொதுப் பயனராக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யவும்.
ஸ்டெப் 2: அதன்பின் அக்கவுண்ட் திறந்து உள்நுழையவும்.
ஸ்டெப் 3: நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் (RTO) தேர்வு செய்து, கிடைக்கும் பட்டியலில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஃபேன்சி நம்பரைத் தேர்ந்தெடுக்கவும். அதேபோல இணையதளத்தில் நீங்கள் எந்த நம்பரை கொண்டு நம்பர் பிளேட் வாங்க இருக்கிறீர்கள் என்று சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு நம்பருக்கும் முன்பதிவு கட்டணம் காட்டப்படும்.
ஸ்டெப் 4: தேவையான பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி, நீங்கள் தேர்ந்தெடுத்த நம்பரை முன்பதிவு செய்யவும்.
ஸ்டெப் 5: நீங்கள் விரும்பும் ஃபேன்ஸி நம்பர் பிளேட்டுக்கான ஏலத்தில் பங்கேற்கவும். தேவைப்பட்டால் உங்கள் ஏலத்தை அதிகரிக்க தயாராக இருங்கள்.
ஸ்டெப் 6: ஏலம் முடிந்த பிறகு, நம்பர் பிளேட்டைப் பாதுகாக்க தேவையான கட்டணத்தைச் செலுத்தவும்.
ஸ்டெப் 7: பிறகு அலாட்மென்ட் லெட்டர்-ஐ பிரிண்ட் செய்யவும். இதுதான் உங்கள் ஃபேன்சி அல்லது விஐபி நம்பர் பிளேட்டுக்கான அதிகாரப்பூர்வ குறிப்பு.
விஐபி நம்பர் பிளேட் ஆன்லைனில் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி?: ஒருவர் பேன்சி நம்பர் பிளேட்டைப் பெற விரும்பினால், அந்த நம்பர் இருக்கிறதா என்பதை நீங்கள் MoRTH இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஸ்டெப் 1: MoRTH இணையதளத்திற்குச் சென்று "Choice Number" பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: கிடைக்கக்கூடிய நம்பரைப் பார்க்க, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தையும் (RTO) தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: பேன்சி நம்பர் பெற விரும்புபவர்கள் தாங்கள் மனதில் இருக்கும் நம்பரை என்டர் செய்து அதிலிருந்து நம்பர் கிடைக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications