வாட்ஸ் அப்பில் ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி? 2 நிமிடங்கள் போதும்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களால் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் புண்ணிய ஸ்தலமாகும். ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க பாலாஜி கோவிலின் தரிசனத்தை எளிதாக்கும் வகையில் ஆந்திர பிரதேச அரசு டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தி "மன மித்ரா" என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் எளிதில் பாலாஜி தரிசன டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.

வாட்ஸ்அப்பில் திருமலை தரிசன டிக்கெட் முன்பதிவு: "மன மித்ரா" சேவையின் கீழ், திருமலை, விஜயவாடாவின் துர்கா மல்லேஸ்வர சுவாமி, ஸ்ரீசைலம், ஸ்ரீகாளஹஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம் மற்றும் துவாரகா போன்ற கோவில்களின் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். இந்த சேவை குறிப்பாக பக்தர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் கோவில் கவுண்டர்களில் நீண்ட வரிசைகளாக நின்று அவதிப்படும் மக்களுக்கு உதவவும் கொண்டுவரப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி? 2 நிமிடங்கள் போதும்!

திருமலை தரிசன டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்வது எப்படி?: திருமலை பாலாஜி தரிசன டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்வது மிகவும் எளிய செயல்முறையே.

ஸ்டெப் 1: மன மித்ரா சேவையின் வாட்ஸ்அப் நம்பரான 9552300009-ஐ உங்கள் மொபைலில் சேவ் செய்யவும்.

ஸ்டெப் 2: வாட்ஸ் அப்பில் இருந்து இந்த நம்பருக்கு "ஹாய்" என்று அனுப்பவும்.

ஸ்டெப் 3: தற்போது கிடைக்கும் ஆப்ஷன்களில் இருந்து "டெம்பிள் புக்கிங் சர்வீசஸ்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்டெப் 4: அதன் பிறகு பாலாஜி தரிசன டிக்கெட் கிடைக்கும் தன்மையை பற்றிய விவரங்களை வழங்கும். பணம் செலுத்தி விட்டு செயல்முறையை தொடரவும். பணம் செலுத்தப்பட்டதும் உங்களுடைய ஈ-டிக்கெட் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பப்படும்.

ஸ்டெப் 5: தொந்தரவு இல்லாமல் கோயில் நுழைவுக்கான டிக்கெட்டை டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்து கொள்ளலாம். தரிசன டிக்கெட் முன்பதிவு தவிர, ஆந்திர அரசு 'மன மித்ரா' சேவைகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஜனவரி 30, 2025 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, மன மித்ரா வாட்ஸ்அப் சேவைகள் மூலம் 2.64 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிமக்களுக்கு வசதியான சேவைகளை அறிமுகப்படுத்த அடுத்த 45 நாட்களுக்குள் 161 கூடுதல் சேவைகளை கொண்டு வரவும் ஆந்திரா அரசு இலக்கு வைத்துள்ளது.

இந்த டிஜிட்டல் முயற்சியை கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களை அதிகரிக்கவும், குறிப்பாக நேரில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் சவால்களை தவிர்க்கவும் அரசு கொண்டுவந்துள்ளது. பாலாஜி கோயிலுக்கு செல்பவர்கள் இனி உங்கள் ஆன்மீகப் பயணத்தை எளிதாக திட்டமிடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+