சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் பலரது ஆசை. ஆனால் அந்த ஆசையை அத்தனை எளிதாக எட்டி விட முடிவது இல்லை. சென்னை போன்ற நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் 2 படுக்கை அறை கொண்ட வீட்டை வாங்க வேண்டும் என்றால் கூட 1 கோடி ரூபாய் தேவை. ரியல் எஸ்டேட் மதிப்புகள் உயர்ந்த அளவுக்கு நம் சம்பளம் உயரவில்லை என்பதே உண்மை.
வீட்டின் விலைகளை கேட்டு பலரும் வாடகை வீட்டிலேயே இருந்துவிடலாம் என்ற முடிவுக்கு கூட வந்துவிடுகின்றனர். ஆனால் ஒரு சின்ன ட்ரிக் இருக்கிறது. அதனை பயன்படுத்தினால் சந்தை விலையை விட 15 லிருந்து 20% வரை குறைவான விலையில் வீடு வாங்க முடியும். அதாவது 1 கோடி ரூபாய் விலை கொண்ட வீட்டினை கூட நாம் 80 லட்சம் ரூபாய்க்கு வாங்கலாம். அது எப்படி என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலானவர்கள் வங்கியில் வீட்டு கடன் வாங்கி தான் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால் தங்களுடைய சக்திக்கு மீறி வீட்டு கடன் வாங்கி விடுவது, திடீரென வேலை இழப்பது உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் நிறுத்தி விடுகின்றனர். இந்த சமயங்களில் வங்கிகள் கடன் வழங்கிய அந்த வீட்டை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்கின்றன.அந்த வீடுகளை ஏலத்தில் விற்பனை செய்து கடன் பணத்தை மீட்டுகின்றன.
வழக்கமாக வங்கிகள் வீட்டு கடன் வழங்கும் போது பேப்பர் வேல்யூ அடிப்படையில் தான் அந்த சொத்தினை மதிப்பீடு செய்யும். இது உண்மையான சந்தை மதிப்பை விட குறைவாக தான் இருக்கும். எனவேதான் அந்த சொத்து ஏலத்திற்கு வரும்போது அவர்கள் பேப்பர் வேல்யூ அடிப்படையில் தான் அதனை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அப்படி என்றால் உண்மையான சந்தை மதிப்பை விட 15 லிருந்து 20% குறைவாக தான் விலை நிர்ணயம் செய்வார்கள்.

இவ்வாறு அரசு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என்னென்ன சொத்துக்களை ஏலம் விடுகிறார்களோ அவற்றை https://baanknet.com/ என்ற இணையதளத்தில் பட்டியலிடுவார்கள். இந்த இணையதளத்திற்கு சென்று எந்த நகரத்தில் என்னென்ன சொத்துக்கள் ஏலத்திற்கு வர இருக்கின்றன , எந்த வங்கி ஏலம் விடுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். அந்த குறிப்பிட்ட அந்த சொத்தின் புகைப்படங்கள் எந்த தேதியில் ஏலம் விடப்படுகிறது என்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
வங்கியில் ஏலம் விடுகிறார்கள் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு இந்த வீடுகளை வாங்கி விடவும் கூடாது. இதற்கு சில முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்வது நல்லது. முதலில் ரிசர்வ்டு பிரைஸ் அதாவது அடிப்படை ஏல விலை என்பதை நிர்ணயம் செய்திருப்பார்கள். இந்த விலைக்கு கீழே நாம் அந்த வீட்டை ஏலம் எடுக்க முடியாது.
வீட்டிற்கான ரிசர்வ்டு விலையில் இன்னும் 25 முதல் 30% வரை கூடினால் எவ்வளவு வருகிறது அதற்கும் சந்தை விலைக்கும் என்ன வித்தியாசம் என பாருங்கள். சந்தை விலையை விட 20% வரை குறைவாக தான் இருக்கிறது என்றால் நிச்சயம் அது உங்களுக்கு நல்ல வாய்ப்பு.
ஏலத்தில் பங்கேற்பதற்கு பதிவு செய்து அடிப்படை ஏல விலையில் 10 சதவீத தொகை முன் பணமாக செலுத்த வேண்டும். ஏலத்தில் நீங்கள் அந்த வீட்டை எடுக்கவில்லை என்றால் அந்த பணத்தை திருப்ப வழங்கி விடுவார்கள். ஒருவேளை ஏலம் எடுத்தால் மொத்த தொகையில் அந்த பணத்தை சேர்த்து கணக்கு செய்து கொள்வார்கள்.
இவ்வாறு ஏலத்தில் வீட்டினை வாங்கும் முன்பு முந்தைய உரிமையாளர் அங்கு வசிக்க வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும், வீட்டின் வில்லங்க சான்றிதழ் பெற்று பார்க்க வேண்டும், ஒரு சட்ட ஆலோசகர் இடம் ஆவணங்களை பரிசோதிக்க வேண்டும், நேரில் சென்று சொத்தை பார்வையிட வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications