ஆதார் கார்ட்-ஐ கட்டாய ஆவணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என அறிவிக்கப்பட்டாலும், பல இடத்தில் ஆதார் முக்கியமானதாக மாறியுள்ளது. இதனால் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆதார் கார்டில் இருக்கும் விபரங்களை கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்தே ஆதார் கார்டில் இணைக்கப்பட்ட போன்ற நம்பரை எப்படி மாற்ற முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
வெறும் 3 நிமிடத்தில் ஆதார் கார்டு போன் நம்பரை மாற்றுவது எப்படி? என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு, இதை எப்படி, எங்கே செய்ய வேண்டும், இதற்காக தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தே மாற்றிக்கொள்ளலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட mAadhaar செயலியில் இந்த வசதியை செயல்பட துவங்கியுள்ளது. முதியோர், உடல் ஊனமுற்றோர், தொலைதூரத்தில் வசிப்பவர்கள் உள்ளிட்ட பல லட்சம் பேருக்கு இந்த சேவை பெரிய அளவில் பலன் அளிக்கும்.
புதிய மொபைல் எண்ணை எப்படி இணைப்பது:
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் mAadhaar செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
- ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஐபோன் பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் இதை இலவசமாகப் பெறலாம்.
- செயலியைத் திறந்தவுடன் "Mobile Number Update" என்ற புதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- புதிய மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- உடனடியாக அந்தப் புதிய எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் அதாவது OTP வரும்.
- அதை உள்ளிட்ட பிறகு முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் உங்கள் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும்.
- இவை முடிந்ததும் புதிய எண் ஆதார் பதிவேட்டில் இணைக்கப்பட்டுவிடும்.
- முழு செயல்முறையும் 3-5 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும்.
எந்தெந்த விவரங்களை ஆன்லைனில் மாற்றலாம்?
mAadhaar செயலி மூலம் தற்போது மொபைல் எண் மாற்றும் வசதி மட்டுமே முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. முகவரி, மின்னஞ்சல் முகவரி, பெயர் ஆகியவற்றை மாற்றும் விருப்பங்களும் செயலியில் காட்டப்படுகிறது என்றாலும் அவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இவை அனைத்தும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த விவரங்களுக்கு இன்னும் ஆதார் மையம் செல்ல வேண்டும்?
கைரேகை, கருவிழி ஸ்கேன், பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவற்றை மாற்ற வேண்டுமானால் ஆதார் மையத்திற்கு நேரில் சென்று பயோமெட்ரிக் புதுப்பித்தல் செய்ய வேண்டும். இவை ஆன்லைனில் சாத்தியமில்லை என்பதால் வரிசையில் நிற்க வேண்டிய நிலை தொடர்கிறது.
இந்த புதிய வசதியால் பல கோடி மக்களின் நேரம் மிச்சமாகும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் வசிப்பவர்கள் இதனால் பெரிதும் பயனடைவார்கள்.


Click it and Unblock the Notifications