இந்தியாவில் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்கு, டீமேட் கணக்கு, அரசின் நலதிட்டங்கள் என அனைத்திற்கும் கட்டாயம் ஆதார் அட்டை கேட்கப்படுகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு கூட ஆதாரை முக்கிய ஆவணமாக கேட்கிறார்கள். பொதுத்தேர்வுகள், போட்டி தேர்வுகளில் பங்கேற்கவும் ஆதார் தேவை. இப்படி முக்கியம் வாய்ந்த ஆதார் கார்டில் உங்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது. இல்லை எனில் அரசின் திட்டங்கள் கிடைக்காமல் போகலாம்.

முகவரி, பெயர் திருத்தம், பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட பல தகவல்களை நாம் ஆதாரில் மாற்றலாம். தற்போதைக்கு முகவ்ரி மாற்றத்திற்கு நாம் இ சேவை மையம் செல்ல வேண்டாம். நம் வீட்டில் இருந்தபடியே ஆதார் செயலி மூலமாகவே மேற்கொள்ளலாம்.
சரியாக முகவரி சான்று கொண்டு ஆன்லைனில் எம் ஆதார் செயலி மூலம் விண்ணப்பம் செய்தால் 15 முதல் 30 நாட்களில் முகவரி மாறிவிடும், மற்ற தகவல்களை இசேவை மையம் சென்று தான் மாற்ற வேண்டும். ஆனால் அடுத்த மாதம் முதல் அதுவும் ஆன்லைனிலேயே மக்களே மாற்றும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக மேம்படுத்தப்பட்ட ஆதார் செயலியை யுஐடிஏஐ கொண்டு வர இருக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்து விட்டால் ஆதாரில் மாற்றம் செய்ய எங்கேயும் அலைய வேண்டாம். போன் மூலமாகவே செய்து கொள்ளலாம்.

இந்த புதிய ஆதார் செயலியில் கியூஆர் கோடு முறையில் ஆதார் அடையாள சரிபார்ப்பும் கொண்டு வரப்பட உள்ளது. தற்போதைக்கு இசேவை மையம் செல்லாமல் முகவரியை ஆதாரில் நாம் போன் மூலமாகவே மாற்ற செய்யலாம். இதற்கு நீங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை தயாராக வைத்திருக்க வேண்டும்.
எம் ஆதார் செயலியில் ஆதார் எண்ணை உள்ளிட்டு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் அதனை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து ஆதார் விவரங்கள் காட்டும். அதில் முகவரி மாற்றம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதனை அடுத்து புதிய முகவரி விவரங்களை உள்ளிட வேண்டும்.
இதற்கு முகவரி சான்றாக அதில் பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றை தேர்வு செய்து அதனை பதிவேற்ற வேண்டும். சிலிண்டர் பில், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புக், தபால் நிலைய கணக்கு பாஸ்புக், மின்சார கட்டண ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்தம் உள்ளிட்டவை ஏற்கப்படுகின்றன.
இந்த ஆவணத்தில் இருக்கும் முகவரியும் நீங்கள் உள்ளிடும் முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும். இதனை அடுத்து கட்டணம் செலுத்தினால் 30 நாட்களில் முகவரி மாறி புதிய அட்டை வீட்டிற்கே தபாலில் வந்துவிடும். ஆனால் இதற்கு ஆதாருடன் நீங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கும் மொப்லை எண்ணை நீங்கள் வைத்திருப்பது கட்டாயம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications