இந்தியாவில் இன்று மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருந்து வரும் ஆதார் கார்டு, அனைத்து விதமான பரிவர்த்தனைகளிலும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அரசு சலுகைகளை பெறுவது முதல் தொடங்கி, பள்ளி, கல்லூரி வரையில் அனைத்து இடங்களிலும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இத்தகைய ஆதாரில் பல அப்டேட்களை நாம் வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ளும் விதமாக, பல வசதிகள் உள்ளன.
குறிப்பாக முகவரி மாற்றம், மொபைல் நம்பர் மாற்றம், பிறந்த தேதியில் மாற்றம் என பலவற்றையும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது.
மொபைல் எண் அவசியம்
நீங்கள் ஆதார் கார்டில் எந்த விதமான மாற்றத்தினை செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு அவசியம் நீங்கள் ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண் அவசியம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அடிக்கடி பலரும் தங்களது மொபைல் எண்ணையும் மாற்றுவதால் இதனை ஆதாரில் அப்டேட் செய்வதில்லை.
மொபைல் எண் அப்டேட்
ஆக இத்தகைய அவசியமான மொபைல் நம்பரை எப்படி உங்கள் ஆதார் கார்டில் மாற்றுவது? குறிப்பாக ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இதில் நீங்கள் முன்னதாக பதிவு செய்த நம்பரை கையில் அவசியம் வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை உங்களிடம் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் இல்லாவிட்டால் ஆஃப்லைனில் தான் மாற்றம் செய்ய முடியும். ஆன்லைனில் செய்ய முடியாது.
ஆன்லைனில் எப்படி?
இதற்காக நீங்கள் UIDAIயின் https://ask.uidai.gov.in/#/ என்ற தளத்திற்கு செல்லவும்.
அடுத்ததாக உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா எழுத்தினை பதிவு செய்து, Send OTP என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியினை கொடுத்து சப்மிட் ஓடிபி & Proceed என்பதை கொடுக்கவும்.
அது அடுத்ததாக மற்றொரு பக்கத்தில் தொடங்கும். இதில் ஆன்லைன் ஆதார் சேவைகள் என்று இருக்கும். அதில் கீழாக அப்டேட் ஆதார் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
என்ன அப்டேட் செய்ய வேண்டும்
உங்களது பெயர், ஆதார் நம்பர் உள்ளிட்டவற்றை கொடுத்து விட்டு, உங்களது resident type-யினையும் கிளிக் செய்ய வேண்டும்.
அதன் கீழாக what do you want to update என்ற பிரிவில் பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபல் நம்பர், இமெயில் ஐடி, முகவை, பயோமெட்ரிக் என்பதில் எதனை மாற்ற வேண்டுமோ அதனை கிளிக் செய்து Proceed என்பதை கொடுக்க வேண்டும். அதில் மொபைல் நம்பரை மாற்ற மொபைல் எண் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஓடிபி வரும்
இது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அங்கு உங்களது புதிய மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும். அதன் பிறகு கீழாக உள்ள கேப்ட்சா எழுத்தினை கொடுத்து Save and proceed என்ற ஆப்சனை கொடுக்க வேண்டும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். இதனை விவரங்களை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து விட்டு கொடுக்கவும்.
இதன் பிறகு ஆன்லைனிலேயே அப்பாயின்ட்மென்ட் ஐடி-யுடன்sucess என்ற திரையில் வரும். அதில் Book Appointment என்ற விருப்பத்தினை பதிவு செய்து அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தினை கொடுக்கவும்.
அங்கு அப்டேட் செய்யப்பட்ட பின்னர் இந்த விவரங்கள் உங்களது ஆதார் பக்கத்தில் 90 நாட்களுக்குள் அப்டேட் ஆகிவிடும்.
ஆஃப்லைனில் எப்படி தெரியுமா?
என்னிடம் பதிவு செய்த மொபைல் எண் இல்லை என்றால், ஆப் லைனில் தான் மொபைல் நம்பரை மாற்றம் செய்ய முடியும்.
இதற்காக அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு செல்லவும். அங்கு ஆதார் அப்டேட் செய்யும் பார்மினை பூர்த்தி செய்து, புதியதாக அப்டேட் செய்யப்பட வேண்டிய மொபைல் நம்பரை கொடுங்கள். அதனை ஆதார் மைய நிர்வாகிகள் URN மூலம் அப்டேட் செய்து கொள்வார்கள். இதற்காக நீங்கள் 25 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications