PAN என அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டை மற்றும் ஆதார் அட்டை தற்போது மக்களின் முக்கிய தனிப்பட்ட அடையாளமாக ஆவணங்களாக மாறியுள்ளது.
இதில் பான் கார்டு வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது, பான் கார்டு பொதுவாக நிதி பரிவர்த்தனைகள், வரி தாக்கல் மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட ஆதார் அட்டை, இந்திய குடிமக்களின் பயோமெட்ரிக் மற்றும் மக்களின் முக்கியமாக தனிநபர் விபரங்கள் அடங்கிய அடையாள ஆவணமாக உள்ளது.
மத்திய அரசு இவ்விரண்டையும் இணைப்பது மூலம் சக்திவாய்ந்த ஆவணமாக மாறியுள்ளது. இவற்றை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளதை மறந்துவிடாதீர்கள். பெரும்பாலான மக்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை
இணைத்துள்ளனர். இந்த நிலையில் ஆதார் அட்டை கொண்டு பான் கார்டில் பெயரில் இருக்கும் எழுத்து பிழையை மாற்றும் வழியை தான் பார்க்கப்போகிறோம்.
பல நேரத்தில் பான் கார்டு அச்சிடப்பட்டு உள்ள பெயர், பெற்றோர் பெயர் அல்லது பிறந்த தேதியில் தவறுகள் இருக்கலாம். உங்கள் பான் கார்டு வழங்கப்பட்ட பிறகு உங்கள் முகவரி அல்லது பெயரில் மாற்றங்கள் இருக்கலாம். இதை சரி செய்ய வீட்டில் இருந்தபடியே ஆதார் விபரங்கள் கொண்டு திருத்த முடியும்.
1. இதற்கு முதலில் மத்திய அரசின் https://www.pan.utiitsl.com/ என்ற இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்
2. இந்த இணைய பக்கத்தில் கீழே வந்தால் Change/Correction in PAN Card என்ற ஆப்ஷன் இருக்கும். இதை கிளிக் செய்ய வேண்டும்.
3. உடன் புதிய பக்கம் திறக்கும் இதில் 3 ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும், அதில் Apply for Change / Correction in PAN Card details என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. உங்களுடை பான் எண்-ஐ இரண்டு முறை கொடுத்து உறுதி செய்யும் முன்பு, முதல் வரியில் physical மற்றும் Digital என்ற இரு ஆப்ஷன் இருக்கும்.
5. இதில் Digital ஆப்ஷன் தேர்வு செய்து அதன் பின் Aadhaar based e-KYC option என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
6. இந்த பக்கத்தில் உங்கள் பெயர் முதல் தாய், தந்தை பெயர் என அனைத்தையும் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும்.
7. கடைசியா ஆதார் எண் கொடுத்து, ஆதாரில் இருக்கும் பெயரை பதிவிட்டு அடுத்த படிக்கு செல்ல வேண்டும்.
8. இதன் பின்பு கொடுக்கப்பட்ட விபரங்களை உறுதி செய்து SUBMIT கொடுக்க வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications